காலை வேளையில் எவ்வாறு சாப்பிட வேண்டும்?

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | |
Advertisement
காலையில் எழுந்ததும் காபி/டீ குடித்துவிட்டு குளித்து டிபன் சாப்பிடுவதை நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டிருப்போம். ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை அதிகளவு அளிப்பதில் காலை உணவு முக்கியப் பங்காற்றுகிறது. சரி..! காலை அதிக ஆற்றல் பெற நாம் என்ன உணவு சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா? இரவு கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது
காலை உணவு, டிபன், Morning Tiffin, Morning foods, breakfast, Foods for Empty Stomach,

காலையில் எழுந்ததும் காபி/டீ குடித்துவிட்டு குளித்து டிபன் சாப்பிடுவதை நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டிருப்போம். ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை அதிகளவு அளிப்பதில் காலை உணவு முக்கியப் பங்காற்றுகிறது. சரி..! காலை அதிக ஆற்றல் பெற நாம் என்ன உணவு சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?

இரவு கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது மணிநேரம் நாம் உணவருந்தாமல் இருக்கிறோம். இது ஒரு விரதம் போல ஆகிவிடுவதால் ஆங்கிலேயர்கள் காலை உணவுக்கு விரதத்தை முடித்தல் என்கிற பொருளில் 'பிரேக்பாஸ்ட்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். நீண்ட நேரம் உணவருந்தாமல் இருப்பதால் வயிற்றில் செரிமான அமிலம் அதிகளவில் சுரந்து இருக்கும். எனவே காலை அமிலத்தின் தாக்கத்தைக் குறைக்க முதலில் தண்ணீர் அருந்த வேண்டும். இது மலக்குடலைத் தூண்டி கழிவுகளை வெளியேற்ற உதவும்.

பின்னர் டீ, காஃபி உள்ளிட்ட கஃபைன் பானங்களை அருந்தினால் அவை செரிமான அமிலத்தின் தாக்கத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அதற்கு மாற்றாக வாழைப்பழம் சாப்பிடலாம். அல்லது கிரீன் டீ அருந்தலாம். அருகம்புல் ஜூஸ், இளநீர், மோர் போன்றவை வயிற்றை குளிர்விக்கும்.

ஜிம் பயிற்சியில் ஈடுபடும் பலர் காலை முளைகட்டிய பயிர், நீரில் ஊறவைத்த சுண்டல், சோறு வடித்த கஞ்சி அல்லது முட்டையின் வெள்ளைக்கரு உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டு ஜிம்முக்குச் செல்வர். இது உடற்பயிற்சிக்கு அதிக ஆற்றலை அளிக்கும்.

காலை மலம் கழித்த பின்னர் குடல் காலியாக உள்ளதால் வயிற்றில் பசி அதிகரிக்கத் துவங்கும். குளியலறையில் குனிந்து, நிமிர்ந்து குளிப்பதே ஒருவித உடற்பயிற்சிதான். நாம் குளித்து முடித்தவுடன் பசி மேலும் அதிகரிப்பதை நம்மால் உணரமுடியும். வயோதிகர்கள் சிலருக்கு குளித்ததும் ரத்த சர்க்கரை அளவு குறைந்து தலைசுற்றல், வியர்வை ஏற்படலாம்.

இந்த நிலையில் காலை உணவை கட்டாயம் சாப்பிட்ட பிறகே மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டும். உலர் திராட்சை, பாதாம், தர்பூசணி உள்ளிட்டவற்றில் ஏதாவதொன்றை காலை உணவுடன் சேர்த்துக்கொள்வதே சிறந்தது. காலை உணவை வயிறு முழுவதுமாக நிரம்பும்வரை சாப்பிடுவது சிரமம்தான். ஆனால் இவ்வாறு சாப்பிட்டால்தான் மதியம் பசி உணர்வு தாமதமாக ஏற்படும். மேலும் மதியம் சாப்பிடும் அளவும் குறையும்.

பதினோரு மணியளவில் காபி/டீ சாப்பிடலாம். மதிய உணவை காலை உணவின் அளவில் 70 சதவீதம் மட்டுமே சாப்பிடவேண்டும். இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்து விடுவது நல்லது. இரவு உணவை மதிய உணவில் பாதி அளவே இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு செய்தால் செரிமானம் சரியாக நடைபெற்று சத்துகள் முழுமையாக உடலில் சேரும். மலச்சிக்கல், வாய்வுப் பிடிப்பு உள்ளிட்டவை ஏற்படாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X