கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரும் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Updated : செப் 13, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (103) | |
Advertisement
புதுடில்லி: ஈ.வெ.ரா சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் ஈ.வெ.ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில்
கடவுள் மறுப்பு, உச்சநீதிமன்றம், தமிழகஅரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஈ.வெ.ரா சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் ஈ.வெ.ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news



இந்த மனு இன்று (செப்.,12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா?' எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202200:00:12 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நியாயமான தீர்ப்பைப் பெற உச்சநீதிமன்றம்தான் செல்ல வேண்டுமா ?
Rate this:
Cancel
13-செப்-202223:57:58 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நாத்திகத்துக்கு இருக்கும் உரிமை ஆத்திகத்துக்கும் உண்டு ........... ஜனநாயக நாடாக இருந்தால் ............
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-செப்-202210:09:31 IST Report Abuse
Sridhar உச்ச கோர்ட் ஒரு உத்தரவு போடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X