அத்தனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : அமைச்சர்கள் பங்கேற்பு

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வெண்ணந்தூர்: ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்பி க்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் கும்பாபிஷேக விழா செப்.7ல் விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது.செப்.8ல் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், செப்.9ல் விநாயகர் பூஜை,மிருத்சங்கிரஹணம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது. செப்.10ல் 2ம், 3ம் கால யாக
 அத்தனூர்அம்மன், கும்பாபிஷேகம், அமைச்சர்கள்,  பங்கேற்பு

வெண்ணந்தூர்: ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்பி க்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் கும்பாபிஷேக விழா செப்.7ல் விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது.

செப்.8ல் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், செப்.9ல் விநாயகர் பூஜை,மிருத்சங்கிரஹணம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது. செப்.10ல் 2ம், 3ம் கால யாக பூஜை, செப்.11ல் 4,5,6 ம் கால யாக பூஜை நடந்தது. ஆறாம் கால யாக பூஜையுடன் கோ பூஜை, ஸ்பர் சாகுதி, மகா பூர்ணாவதி தீபாராதனை நடந்த நிலையில், செப்.12 திங்கட்கிழமை பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள் யாகசாலை, கோயிலை சுற்றி வர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.


latest tamil news





பங்கேற்பு:


இதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மதிவேந்தன், எம்.பி.,கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், சேந்தமங்கலம் சட்டசபை உறுப்பினர் பொன்னுசாமி, முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி, பாவை நடராஜன், பழனிவேல், அத்தனூர் பேரூராட்சி தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARULMANI -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202216:18:29 IST Report Abuse
ARULMANI athanoor amman swamiku mudhalvanakkam.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
12-செப்-202216:06:01 IST Report Abuse
sankar "கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" - பெரியார் சொல்றாருங்கோ - நான் சொல்லவில்லை
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
12-செப்-202215:14:32 IST Report Abuse
வெகுளி மக்கள் கூட்டத்தை ஜூம் பண்ணி பார்த்தா ஓசிச்சோறும் உள்ள ஒளிஞ்சு நிக்குதான்னு தெரிஞ்சுடும்... ஹிஹி...இதுதான் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி....
Rate this:
sankar - Nellai,இந்தியா
12-செப்-202216:06:59 IST Report Abuse
sankarஅவுங்களுக்கு - ஓசி பொங்கல் பிரசாதம் போயிருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X