காற்றை சுத்திகரிக்கும் மணி பிளான்ட்!| Dinamalar

காற்றை சுத்திகரிக்கும் மணி பிளான்ட்!

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | |
இந்திய வீடுகளில் துளசி போல அதிகம் காணப்படும் தாவரம் மணி பிளான்ட். மணி பிளான்டை பொறுத்தவரை வீட்டிற்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்பப்படுகிறது. இதை ஒரு சின்ன தொட்டியில் அல்லது கண்ணாடி பாட்டிலில் எளிதில் வளர்க்கலாம். பொதுவாக இதற்கு தண்ணீர் மட்டுமே போதும். அதனாலேயே அதிக வளர்க்கப்படுகிறது. உலகளவில் இச்செடியினை
Lifestyle, Householdtips, Gardening, Moneyplant, tips, லைப்ஸ்டைல், வீட்டுபராமரிப்பு, செடிவளர்த்தல், மணி பிளான்ட், டிப்ஸ், பராமரிப்பு

இந்திய வீடுகளில் துளசி போல அதிகம் காணப்படும் தாவரம் மணி பிளான்ட். மணி பிளான்டை பொறுத்தவரை வீட்டிற்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்பப்படுகிறது. இதை ஒரு சின்ன தொட்டியில் அல்லது கண்ணாடி பாட்டிலில் எளிதில் வளர்க்கலாம். பொதுவாக இதற்கு தண்ணீர் மட்டுமே போதும். அதனாலேயே அதிக வளர்க்கப்படுகிறது.

உலகளவில் இச்செடியினை போதோஸ் என்ற பொது பெயரில்அழைக்கின்றனர். 'டெவில்ஸ் ஐவி' என்ற பெயரும் இதற்கு உண்டு. அதேபோல் வாஸ்துபடி இதை வீட்டில் வைத்தால் செல்வம் பெரும் என்ற நம்பிக்கை இருப்பதால் மணி பிளான்ட் என்று அழைக்கப்படுகிறது.

இது நமக்கு செல்வத்தைக் தருகிறதோ இல்லையோ, வீட்டுக்குள் நல்ல காற்றை அளிக்கும். மேலும் வீட்டில் இருக்கும் காற்றை சுத்திகரிக்கும் வேலையையும் செய்யும். அதனால் உங்கள் வீட்டிலுள்ள காற்றை சுத்தம் செய்வதற்காகவே மணி பிளான்ட் அவசியம் வளர்க்கலாம். பார்ப்பதற்கும் மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

நேரடி சூரிய வெளிச்சம் கிடைக்காத பகுதியிலும் வளரும் என்பதால் வீட்டினுள்ளும் வளர்ப்பதற்கு ஏற்றது. அதுவும் வீட்டிற்குள் மிகவும் குறைவான வெளிச்சத்தில், தண்ணீரிலேயே நன்கு வளரும் . இந்த செடியை வெளியிலும் வளர்க்கலாம். இது கொடிபோல் படரும் தன்மை கொண்டது. அதனால் தொங்கும்படியும் வளர்க்கலாம்.



latest tamil news



வளர்க்க சில டிப்ஸ்:

அக்கம் பக்கத்தினர் அல்லது நண்பர்கள் வீட்டில் இருக்கும் மணி பிளான்டின் சிறு கொடியை வாங்கி கொள்ளவும். கிடைத்த கொடியின் அடிப்பாகத்தில் காணப்படும் கணுக்கு பக்கத்தில் கொடி வெட்டப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையேல் அப்படி நறுக்கிக்கொள்ளுங்கள். அந்த அடி கணுவிலிருந்து மேலாக உள்ள 2-3 இலைகளை வெட்டி விடுங்கள். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விட்டு, கொடியை அதில் விட வேண்டியது தான். விரைவில் வேர்விட்டு வளர துவங்கும்.

பாட்டிலில் வளர்க்க இதற்கு பொதுவாக குழாய் தண்ணீரையோ, போர் தண்ணீரையோ பயன்படுத்தலாம். ஆனால் அதில் நிறைய உப்புகளும், குளோரினும் இருந்தால் அந்த தண்ணீரை தவிர்ப்பது நல்லது. உரம் சேர்ப்பது செடியை நன்கு செழிப்பாக வளர செய்யும் என்பதால், நர்சரியில் கிடைக்கும் திரவ உரம் சேர்ப்பது நல்லது. வாரம் ஒரு முறையோ இரு வாரத்திற்கு ஒரு முறையோ தண்ணீர் மாற்ற வேண்டும் இல்லை என்றால் பாசம் பிடிக்கும்.


latest tamil news



இதை பாட்டிலில் மட்டுமல்ல தொட்டியிலும் வளர்க்கலாம். தொட்டியில் வளர்க்க விரும்பினால், கிளை வேர்களும் முளைத்து நன்கு வளரும் வரை காத்திருக்கவும். அவை வந்தவுடன் மண்ணில் இடம் மாற்றலாம். புது செடியாக வேண்டும் என்றால் நர்சரியில் மணி பிளான்டை வாங்கி கொள்ளலாம். ஒரு செடி சுமார் ரூ.20-50 வரை விற்க படுகிறது.

இந்தச் செடி வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதன் இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை. எனவே, செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகள் இவற்றை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X