ஸ்டீவ் ஜாப்ஸிடம் கற்றுகொள்ள வேண்டிய 4 பாடங்கள்..!

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | |
Advertisement
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ், (1954 -2011) தொழில்நுட்பம் சார்ந்து ஆர்வமுள்ள பலருக்கும் பரிச்சயமானவர் மட்டுமின்றி முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர். ஆப்பிள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் மேடைகளில் அவரது பேச்சை கேட்கவே, தனியாக ரசிகர்கள் கூட்டம் உண்டு. மாணவர்கள், செய்தியாளர்கள் மற்றும் பல்வேறு நேர்காணல்கள் வழியே அவர்
ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள், அமெரிக்கா, Steve Jobs, Apple, USA, Apple Co founder,


அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ், (1954 -2011) தொழில்நுட்பம் சார்ந்து ஆர்வமுள்ள பலருக்கும் பரிச்சயமானவர் மட்டுமின்றி முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர். ஆப்பிள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் மேடைகளில் அவரது பேச்சை கேட்கவே, தனியாக ரசிகர்கள் கூட்டம் உண்டு.

மாணவர்கள், செய்தியாளர்கள் மற்றும் பல்வேறு நேர்காணல்கள் வழியே அவர் நிகழ்த்தி சென்ற உரையாடல்கள் இன்றும் பலருக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அவரிடம் இருந்து இளம் தலைமுறை கற்றுகொள்ள வேண்டிய 4 விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.1. மனித அனுபவங்களை சேருங்கள் :1983ம் ஆண்டு, மேகிண்டோஷ் கம்யூட்டரை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, ஸ்டீவ் வாக், தனக்கு முன்னால் கூடியிருந்த டிசைனர்கள் மத்தியில் ஆப்பிளின் நோக்கம், முயற்சி குறித்து பேசியிருப்பார்.


latest tamil news


அதில் 'சில பைத்தியக்காரத்தனமாக தோன்ற கூடிய ஒன்றை உருவாக்குவதற்கு, சரியான நேரத்தில், சரியான இடத்தில் கூடி இருக்கிறோம் என்று உணர்கிறோம். நம்மில் பெரும்பாலோனர், நாம் அணிந்திருக்கும் ஆடைகளை உருவாக்கவில்லை. உண்ணும் உணவை சமைக்கவில்லை அல்லது உற்பத்தி செய்வதில்லை. நாம் தொடர்ச்சியாக பெற்று கொண்டே வருகிறோம். மனித குலத்திற்கு, மிகவும் நேர்த்தியாக அனுபவம் ஒன்றை திருப்பி அளிக்கும் திறனுடன் கூடி இருக்கிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.


2. தவறு செய்யுங்கள்.. தவறே இல்லை :1984ம் ஆண்டு, சிலிக்கான்வேலி செய்தியாளர் மைக்கேல் மோரிட்ஸ் என்பவரிடம், ஜாப்ஸ் கூறுகையில், 'தவறுகள் செய்வது ஒருவரை மேம்படுத்த உதவும். நீங்கள் எந்தளவுக்கு தவறுகளை செய்து, அதனை திருத்தி, கொண்டு வரும் போது, மேலும் செழுமையாக இருக்கும். எனக்கு நிறைய தவறுகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. மேலும், இது உயர்வான அழகிய உணர்வு அல்ல. ஆனால் இடைவிடாத சிறப்பான நாட்டமே மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டும்' என கூறியிருப்பார்.


3. ஆழ்மனசு சொல்றத கேளுங்க :2005ல் ஸ்டான்போர்டு விழாவில் ஜாப்ஸ், பட்டதாரிகள் தங்களது உள்ளுணர்வு சொல்வதை நம்புங்கள் என அறிவுரை வழங்கினார்.


latest tamil news


'மற்றவர்களுடைய கருத்துகளின் உரத்த சத்தத்தில், உங்கள் ஆழ்மன குரலை மூழ்கடிக்க விட்டுவிடாதீர். மிக முக்கியமாக, உங்கள் மனசு சொல்லுவதையும், உள்ளுணர்வையும் பின்பற்ற தைரியம் வேண்டும். ஏனெனில் நீங்கள் உண்மையில் என்ன ஆக விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான்' என்றார்.


4. கலையும் அறிவியலும் எதிரெதிர் துருவங்கள் அல்ல :


எந்தவொரு துறையாக இருந்தாலும் அதன் இலக்கு ஒன்றாக இருக்க முடியுமென ஜாப்ஸ் உறுதியாக நம்பினார்.


latest tamil news


1995ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், ஜாப்ஸ், 'ஒரு கலைஞனுக்கும், ஒரு விஞ்ஞானி அல்லது உயர் திறன் கொண்ட பொறியியல் வல்லுனருக்கும் இடையே உண்மையில் மிக குறைவான வேறுபாடுகளே உள்ளன. அவர்கள் வெவ்வேறு பாதைகளை பின் தொடர்பவர்கள். ஆனால் ஒரே இலக்கை நோக்கிச் செல்பவர்கள். அதாவது தங்களை சுற்றி நிகழும் உண்மையை, உணரும் ஒன்றை வெளிப்படுத்த வேண்டுமென விரும்புவர்கள். அதனை மற்றவர்கள் பார்த்து பயனடையலாம்' என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X