ரூ.1800 கோடி செலவில் அயோத்தி ராமர் கோவில்: அறக்கட்டளை தகவல்

Updated : செப் 13, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2024 ஜனவரி மாதம் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என தகவல்உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன. கடந்த 2020 ஆக.,5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்
Ayodhya, Ram Temple, Construction, Cost, Trust, அயோத்தி, ராமர் கோவில், கட்டுமானம், செலவு, அறக்கட்டளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2024 ஜனவரி மாதம் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என தகவல்

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன. கடந்த 2020 ஆக.,5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் கூறியதாவது:


latest tamil news


கோவில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய ஹிந்து சமய ஜீயர்களின் சிலைகளை வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது. 2023 டிசம்பரில் கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
13-செப்-202205:00:29 IST Report Abuse
T.SRINIVASAN தொழுகை நடத்தாத கட்டிடத்தை வைத்து இந்துக்களை வஞ்சித்த காங்கிரஸ். கேவலம் முஸ்லிம் ஓட்டுகளுக்காக இந்து நம்பிக்கையை சிதைத்த காங்கிரஸின் கொடுமையை தகர்த்து மோடி அரசு.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
12-செப்-202220:40:16 IST Report Abuse
TamilArasan நானும் 10001 ரூபாய் ஆன்லைன்னில் நன்கொடை வழங்கியதை பாக்கியமாக கருதுகிறேன்
Rate this:
Cancel
12-செப்-202220:30:08 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் எல்லாம் தேர்தல் பயம் இவன் செய்த ஒரே காரியம் இது தான்
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202206:09:50 IST Report Abuse
Kasimani Baskaranபாஜகவின் தேர்தல் அறிக்கையில் இராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். அதன்படி நிறைவேற்றிவிட்டார்கள். திமுகவின் நீட் என்னானது என்று கேட்டுச்சொல்லவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X