இவி வெர்ஷனில் டாடா டியாகோ அறிமுகம்!

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | |
Advertisement
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.இந்திய சந்தையில் விற்பனையில் போட்டிபோட்டு கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புது வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாகவே டியாகோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்திய சந்தையில் மிகவும்
Dinamalar, Automobiles, Tata_Tiago EV, தினமலர், ஆட்டோமொபைல், டாடா டியாகோ இவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையில் போட்டிபோட்டு கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புது வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாகவே டியாகோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ. ஏனென்றால், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ, அல்லது கேப் ஓட்டுவதற்கும் சிறந்த தேர்வாக இந்த டியாகோ மாடல் இருந்து வந்தது. இந்நிலையில் புது எலெக்ட்ரிக் கார் இதே மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



தற்போதைய நிலையில் டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இந்த டியாகோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



பேட்டரியை பொறுத்தவரை, டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 26kWh பேட்டரி தொகுப்பு தான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடகை கார் ஓட்டுவோருக்காக டிகோர் EV X-Pres T EV மாடலையும் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் 21.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மோட்டார் 40 ஹெச்பி பவர், 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை நிலவரம் குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை. தோராயமாக இதன் விலை ரூ. 10லட்சத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X