அரசு ஊழியர்களை செயல்பட விடாமல் தடுக்கும் ஸ்டாலின்: பழனிசாமி குற்றச்சாட்டு

Updated : செப் 13, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சேலம்: அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று அரசு ஊழியர்கள் ஏங்குகிறார்கள். அரசு ஊழியர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கிறார் ஸ்டாலின் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை,
ADMK, Palanisamy, EPS, Stalin, ஸ்டாலின், இபிஎஸ், குற்றச்சாட்டு, பழனிசாமி, அதிமுக

சேலம்: அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று அரசு ஊழியர்கள் ஏங்குகிறார்கள். அரசு ஊழியர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கிறார் ஸ்டாலின் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை, தர்மம் வென்றுள்ளது. கட்சி விதிகளுக்கு உட்பட்டு விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். 2 ஆண்டுகால கொரோனா தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. நீதிமன்றத்தை நாடியவர்களுக்கு கட்சியில் இடமில்லை. தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை எதிர்த்து, வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தூர்வாரும் பணிகளை விடியா திமுக அரசு முறையாக முடிக்காததால் பல பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.

அரசு ஊழியர்களை ஸ்டாலின் ஏமாற்றி விட்டார். அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று அரசு ஊழியர்கள் ஏங்குகிறார்கள். அரசு ஊழியர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கிறார் ஸ்டாலின். கட்சியில் யார் யாரை சேர்ப்பது, சேர்க்கக்கூடாது என்பதை அதிமுக தலைமையே முடிவு செய்யும். தொகுதி மேம்பாட்டு நிதியை கூட வழங்காத ஸ்டாலின் எப்படி தொகுதி பிரச்னைளை தீர்த்து வைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
12-செப்-202220:01:46 IST Report Abuse
சாண்டில்யன் பிரச்சினைகளை சரியானபடி தொகுத்து சொல்லாமல் சீட்டு குலுக்கி போட்டது போல் (பிச்சைக்காரன் வாந்தியெடுத்ததுபோலண்ணும் சொல்வார்கள்) போட்டிருக்கிறது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-செப்-202202:04:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அவர் சொன்னதை தான் போட்டிருக்கிறார்கள் - (...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202219:02:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாவம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X