200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Added : செப் 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், தனியார் மண்டபத்தில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அதேபோல், வெள்ளக்கோவிலில் 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும்
காங்கேயம், கர்ப்பிணிகள், வளைகாப்பு, Kangeyam, pregnant women,

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், தனியார் மண்டபத்தில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அதேபோல், வெள்ளக்கோவிலில் 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்க இயக்குநர் லட்சுமணன் தலைமை வகித்தார். செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000ம், மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உன்ன வேண்டிய உணவு முறைகள் உணவின் அளவு, முழுதானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், குழந்தை ஆரோக்கியம் மற்றும் கர்ப்ப கால பராமரிப்பு, கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் தயார்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் எடுத்துக்கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்த குறிப்பேடு உள்ளிட்டவை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இதேபோல் வெள்ளக்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து 120 சீர்வரிசை வழங்கி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000ம், மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
12-செப்-202221:18:56 IST Report Abuse
a natanasabapathy ஜனத்தொகை கட்டுக்கு அடங்காமல் பெருகி கொண்டே செல்கிறது நிற்க கூட இடம் கிடைக்காது போல. நீங்கள் இலவசமாக வளைகாப்பு நடத்துகிறீர்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
12-செப்-202220:56:28 IST Report Abuse
Fastrack பெண்கள் சம்மந்தப்பட்ட விழாவில் இவர்களுக்கு என்ன வேலை ..இவர் கணவர்களுக்கு மோதிரம் போட்டு விழா கொண்டாடியிருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X