புதிய ரேஷன் கார்டு 20,338 பேருக்கு ஒப்புதல்| Dinamalar

புதிய ரேஷன் கார்டு 20,338 பேருக்கு ஒப்புதல்

Added : செப் 12, 2022 | |
சென்னை : புதிய ரேஷன் கார்டு கேட்டு, ஆக., மாதத்தில், 48 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், 20 ஆயிரத்து 338க்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டு பெற உணவு வழங்கல் துறையின், www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து வீடுகளில் ஆய்வு செய்து கார்டு வழங்க, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.
புதிய ரேஷன் கார்டு 20,338 பேருக்கு ஒப்புதல்

சென்னை : புதிய ரேஷன் கார்டு கேட்டு, ஆக., மாதத்தில், 48 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், 20 ஆயிரத்து 338க்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு பெற உணவு வழங்கல் துறையின், www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து வீடுகளில் ஆய்வு செய்து கார்டு வழங்க, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். அதிகபட்சம், 30 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், இரு மாதங்களுக்கு மேலாகியும் கார்டு தருவதில்லை.



சில அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யாமல், விண்ணப்பித்த உடனேயே ஏதேனும் காரணங்களை கூறி, விண்ணப்பத்தை நிராகரித்து விடுகின்றனர். கடந்த ஆக., மாதம் புதிய கார்டு கேட்டு, 48 ஆயிரத்து 76 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 20 ஆயிரத்து 338 பயனாளிகளுக்கு மட்டும் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக குறிப்பிட்ட அவகாசத்திற்குள் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X