நீர்நிலைகளை பாதுகாக்க பசுமை- தீர்ப்பாயம் உத்தரவு

Added : செப் 12, 2022 | |
Advertisement
சென்னை : 'மயிலாடுதுறை நகராட்சி பகுதியில், நீர்நிலைகள், கால்வாய்களை பாதுகாக்க, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.காவிரி ஆறு, பழங்காவிரி கால்வாய், பட்டமங்கலம் கால்வாயின் கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, மயிலாடுதுறையில் செயல்படும் புங்கனுார்
நீர்நிலைகளை பாதுகாக்க பசுமை- தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை : 'மயிலாடுதுறை நகராட்சி பகுதியில், நீர்நிலைகள், கால்வாய்களை பாதுகாக்க, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆறு, பழங்காவிரி கால்வாய், பட்டமங்கலம் கால்வாயின் கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, மயிலாடுதுறையில் செயல்படும் புங்கனுார் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் விஜயகுமார் என்பவர், 2017ல், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், நீதித் துறை உறுப்பினர்கள் நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர்கள் சத்யகோபால், செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், நீர்நிலைகளை பாதுகாத்தல், கழிவுகளை மேலாண்மை செய்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாத்தல், கழிவு மேலாண்மை தொடர்பாக, அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X