ரூ.45 கோடி மோசடி வழக்கு; கைதானவருக்கு ஜாமின் மறுப்பு

Added : செப் 12, 2022 | |
Advertisement
சென்னை: லி நிறுவனங்கள் நடத்தி, 45 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு, ஜாமின் வழங்க மறுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் ஆகஸ்ட் 2ல், 45 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, காளஹஸ்தீஸ்வரன், 45, என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி நிதி நிறுவன மோசடி தொடர்பாக, 10க்கும் மேற்பட்டோர் மீது, மத்திய குற்றப்பிரிவு

சென்னை: லி நிறுவனங்கள் நடத்தி, 45 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு, ஜாமின் வழங்க மறுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட் 2ல், 45 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, காளஹஸ்தீஸ்வரன், 45, என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி நிதி நிறுவன மோசடி தொடர்பாக, 10க்கும் மேற்பட்டோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.இந்நிலையில் ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், காளஹஸ்தீஸ்வரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி வாதாடியதாவது:மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காளஹஸ்தீஸ்வரன் உள்ளிட்டோர் அளித்த உறுதியை நம்பி, புகார்தாரர் 51.32 கோடி வரை முதலீடு செய்துள்ளார். ஒப்பந்தபடி முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்காமல், மனுதாரர் உட்பட 11 பேர் மோசடி செய்து, துாத்துக்குடி மாவட்டத்தில் 3,000 ஏக்கர் வரை, உறவினர்கள் பெயரில் நிலங்களை வாங்கியுள்ளனர்.

புகார்தாரருக்கு, 45 கோடி ரூபாய்க்கு வழங்கிய, 'செக்' வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. மேலும், மோசடியில் ஈடுபட்ட நபர்கள், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய பலர் தலைமறைவாகினர். பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. பெரியளவில் பணம் மோசடி நடந்துள்ளதால், ஜாமின் வழங்கக் கூடாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X