தமிழ்நாடு நாள் விழா போட்டி; வென்ற மாணவர்களுக்கு பரிசு| Dinamalar

தமிழ்நாடு நாள் விழா போட்டி; வென்ற மாணவர்களுக்கு பரிசு

Added : செப் 12, 2022 | |
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் 'தமிழ்நாடு விழா' போட்டியில் கட்டுரை, பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விழாவில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற எமனேஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
தமிழ்நாடு நாள் விழா போட்டி;  வென்ற மாணவர்களுக்கு பரிசு



ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் 'தமிழ்நாடு விழா' போட்டியில் கட்டுரை, பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விழாவில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற எமனேஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி லீலாவதிக்கு ரூ.10,000, இரண்டாமிடம் பெற்ற காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மணிமேகலாவிற்கு ரூ. 7000.



மூன்றாமிடம் பெற்ற ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி மு.நூர்ஷபீலாவிற்கு ரூ.5000 பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி அஸ்பியா ஷீரீன் முதலிடம், கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி இந்துதீபிகா இரண்டாமிடம், நெடுங்குளம் ஒன்பதாம் வகுப்பு மாணவி கஸ்துரி மூன்றாமிடம் பெற்றனர். இவர்களுக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.



இதுபோல முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா பேச்சு போட்டியில் முதலிம் பெற்ற ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி காயத்ரிக்கு ரூ.5000, இரண்டாமிடம் பெற்ற பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி தர்ஷினிக்கு ரூ.3000, மூன்றாமிடம் பெற்ற பரமக்குடி கே.ஏ. மேல முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் செய்யதுகனிக்கு ரூ.2000 வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு பெற்ற கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அரவிந்த், திருவாடனை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ராதாமணி ஆகியோருக்கு தலா ரூ.2000 பரிசை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன் பங்கேற்றனர்.--------


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X