டேங்கர் லாரிகள் அட்டகாசம்கழிவு நீரால் நிரம்பும் வடிகால்| Dinamalar

டேங்கர் லாரிகள் அட்டகாசம்கழிவு நீரால் நிரம்பும் வடிகால்

Added : செப் 12, 2022 | |
புழல் :தனியார் டேங்கர் லாரிகளின் அட்டகாசத்தால், அரைகுறையான புதிய மழை நீர் வடிகால் வாயிலாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவு நீர் பாய்கிறது.சென்னை மாதவரம் மண்டலம், 23வது வார்டு, புழல் அடுத்த காவாங்கரையில், மழை நீர் வடிகால் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. அங்குள்ள பெரிய மீன் மார்க்கெட் அருகே, அணுகு சாலையிலும், வடிகால் பணி அரைகுறையாக விடப்பட்டது.அதில்,
டேங்கர் லாரிகள் அட்டகாசம்கழிவு நீரால் நிரம்பும் வடிகால்

புழல் :தனியார் டேங்கர் லாரிகளின் அட்டகாசத்தால், அரைகுறையான புதிய மழை நீர் வடிகால் வாயிலாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவு நீர் பாய்கிறது.சென்னை மாதவரம் மண்டலம், 23வது வார்டு, புழல் அடுத்த காவாங்கரையில், மழை நீர் வடிகால் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. அங்குள்ள பெரிய மீன் மார்க்கெட் அருகே, அணுகு சாலையிலும், வடிகால் பணி அரைகுறையாக விடப்பட்டது.


அதில், சுற்றுவட்டாரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவு நீர், தனியார் டேங்கர் லாரிகள் வாயிலாக, தினமும், இரவு முதல் அதிகாலை வரை, 8 முதல் 10 நடைக்கு கழிவுநீர் விடப்படுகிறது.மேலும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, ஏற்கனவே உள்ள மழை நீர் வடிகாலில் கட்டட கழிவு, 'பிளாஸ்டிக்' டயர் உள்ளிட்ட திடக்கழிவுகள் அடைந்துள்ளன. அதனால், டேங்கர் லாரிகள் வாயிலாக விடப்படும் கழிவு நீர், வடிந்து செல்ல வழியின்றி பின்னோக்கி பாய்ந்து, அரைகுறையான புதிய மழை நீர் வடிகால் வழியாக, கண்ணப்பசாமி நகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது.அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள், இது குறித்து புகார் செய்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், அலட்சியம் காட்டுகின்றனர்.



மழைக்காலத்திற்கு முன், இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், கண்ணப்பசாமி நகர் குடியிருப்புகள், கழிவு நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படும் என, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.அணுகு சாலையில் நிறுத்தி, கழிவு நீரை மழை நீர் வடிகாலில் விடும் டேங்கர் லாரிகளின் அட்டகாசத்தை, புழல் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X