வடிகால் கட்டுமான பணி மந்தம்எம்.எம்.டி.ஏ., காலனி மக்கள் அவதி

Added : செப் 12, 2022 | |
Advertisement
அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலத்தில், 194 கோடி ரூபாய் செலவில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி, வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் அகத்தியர் நகர் உள்ளிட்ட 25 இடங்களில், மழை நீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.கடந்தாண்டு பெய்த மழையில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இப்பகுதிகளில் நடந்து வரும் பணிகளில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்தவில்லை என, குற்றச்சாட்டு
வடிகால் கட்டுமான பணி மந்தம்எம்.எம்.டி.ஏ., காலனி மக்கள் அவதி


அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலத்தில், 194 கோடி ரூபாய் செலவில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி, வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் அகத்தியர் நகர் உள்ளிட்ட 25 இடங்களில், மழை நீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.கடந்தாண்டு பெய்த மழையில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இப்பகுதிகளில் நடந்து வரும் பணிகளில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி பகுதியில் கட்டுமான பணிகள் மந்த நிலையிலேயே நடக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பணிகள் நிலுவையில் உள்ளன. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதை கண்காணித்து, பருவ மழைக்கு முன், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X