பாம்பன் ரயில் பாலத்தில் வர்ணம் பூசும் பணி| Dinamalar

பாம்பன் ரயில் பாலத்தில் வர்ணம் பூசும் பணி

Added : செப் 12, 2022 | |
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.பாம்பன் கடல் மீது 1914ல் அமைக்கப்பட்ட ரயில் பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக உள்ளது. நூற்றாண்டு விழா கண்ட இப்பாலத்தின் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை உப்புக் காற்றில் துருப்பிடிக்காத வகையில் ரயில்வே ஊழியர்கள் ரசாயனம் கலந்த
பாம்பன் ரயில் பாலத்தில் வர்ணம் பூசும் பணி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

பாம்பன் கடல் மீது 1914ல் அமைக்கப்பட்ட ரயில் பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக உள்ளது. நூற்றாண்டு விழா கண்ட இப்பாலத்தின் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை உப்புக் காற்றில் துருப்பிடிக்காத வகையில் ரயில்வே ஊழியர்கள் ரசாயனம் கலந்த வர்ணம் பூசி பராமரிக்கின்றனர்.



செப்.10 முதல் பாம்பன் தூக்கு பாலத்தில் ரசாயன வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில நாட்கள் வரை இந்த பணி நடக்க உள்ளது. இதனால் ரயில் போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை, என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X