கலெக்டர் ஆபீஸ் எதிரில்குட்கா விற்பனை ஜோர்!குறைகேட்பு கூட்டத்தில் புகார்| Dinamalar

கலெக்டர் ஆபீஸ் எதிரில்'குட்கா' விற்பனை ஜோர்!குறைகேட்பு கூட்டத்தில் புகார்

Added : செப் 13, 2022 | |
திருப்பூர்:பொங்குபாளையம் கருப்பராயன்கோவில் குட்டையில் இருந்து கூடுதலாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு
கலெக்டர் ஆபீஸ் எதிரில்'குட்கா' விற்பனை ஜோர்!குறைகேட்பு கூட்டத்தில் புகார்

திருப்பூர்:பொங்குபாளையம் கருப்பராயன்கோவில் குட்டையில் இருந்து கூடுதலாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், 'கருப்பராயன் கோவில் குட்டையை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும். கலெக்டர் உத்தரவுப்படி, ஐந்து நாட்கள் மட்டுமே வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைத்தது. 5 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்க, ஆவன செய்ய வேண்டும்,' என கூறியுள்ளார். பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை ஊராட்சி தலைவர் துாயமணி அளித்த மனுவில், 'அலகுமலை துவக்க பள்ளியின் முன், மழை நீர் தேங்கி நிற்கிறது. நீர்வழிப்பாதையில் உள்ள மண்ணை துார்வாரி, மண் எடுத்து பள்ளி வளாகத்தில் கொட்டி சமன் செய்ய அனுமதி வழங்க வேண்டும்,' என கூறியுள்ளார். தி.மு.க., தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவி கொடுத்த மனுவில், 'கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக்கடைகளில், புகையிலை பொருள் விற்பனை நடக்கிறது. பஸ் ஸ்டாப் அருகே உள்ள கடைகளில், புகையிலை பொருள் விற்கின்றனர். இதனை தடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X