200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருப்பூர்:காங்கயத்தில், சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில், கர்ப்பிணி வளைகாப்பு விழா நடைபெற்றது.காங்கயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்க இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் கர்ப்பிணிகளுக்கு, சீர் பொருட்கள் வழங்கி

திருப்பூர்:காங்கயத்தில், சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில், கர்ப்பிணி வளைகாப்பு விழா நடைபெற்றது.காங்கயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்க இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் கர்ப்பிணிகளுக்கு, சீர் பொருட்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு விழா வைத்து துவக்கி வைத்தார்.தலா ஆயிரம் ரூபாய், வேட்டி, சேலைகளையும் அவர் தனது சொந்த செலவில் வழங்கினார். இதில், மாவட்ட திட்ட அலுவலர் மரகதம், காங்கயம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா, காங்கயம் நகர தி.மு.க., செயலாளர் சேமலையப்பன், வட்டார மருத்துவ அலுவலர் முரளி, நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.இதில் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளர் இளம்பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.வெள்ளகோவில்வெள்ளக்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, 120 பேருக்கு சீர் வரிசை பொருட்களும், தனது சொந்த செலவில் தலா 1,000 ரூபாய், வேட்டி, சேலை வழங்கினார்.நகராட்சி தலைவர் கனியரசி, நகர தி.மு.க., செயலாளர் சபரி முருகானந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X