ஆயிரம் வாக்காளர் வரை ஓட்டுச்சாவடிஅனைத்து கட்சியினர் யோசனை

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருப்பூர்:''ஓட்டுச் சாவடிகளில் ஆயிரம் முதல் 1,200 வாக்காளர் கொண்ட ஓட்டுச் சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும்'' என அனைத்து கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் தற்போது 2,68,453 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 73 மையங்களில் மொத்தம் 242 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது, 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை

திருப்பூர்:''ஓட்டுச் சாவடிகளில் ஆயிரம் முதல் 1,200 வாக்காளர் கொண்ட ஓட்டுச் சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும்'' என அனைத்து கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் தற்போது 2,68,453 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 73 மையங்களில் மொத்தம் 242 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது, 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.அதனடிப்படையில், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சியில் நடைபெற்றது. செயற்பொறியாளர் முகமது சபியுல்லா தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு பொறுப்பாளர் கலாவாணி, நான்கு மண்டல உதவி கமிஷனர்கள் முன்னிலை வகித்தனர்.இதில், பங்கேற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் பேசியதாவது:ஓட்டுச்சாவடிகள் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 1,500க்கும் குறைவான அளவில் மட்டுமே உள்ளன. தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் ஆயிரம் முதல் 1,200 வாக்காளர்கள் உள்ள ஓட்டுச் சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.இதன் மூலம் ஓட்டுப் பதிவு சதவீதம் குறைவது தவிர்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்கள் பெயர் நீக்கம் செய்வது முழுமையாக மேற்கொள்ளப்படாமல் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது தவிர்க்க முடியாமல் உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போதே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கான படிவத்தையும் சேர்த்துப் பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X