புதுடில்லி, :புதுடில்லியில் சராய் ரோஹில்லா என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலைக்குள் இஸார் என்ற ௧௯ வயது இளைஞர் நுழைந்துள்ளார். அங்கு, அவர் ஒரு மொபைல் போனை திருடியபோது, கியானி என்ற தொழிலாளி பிடித்து விட்டார். அந்த இளைஞரை சாலைக்கு இழுத்து வந்த கியானியும், மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து, 'பிளாஸ்டிக்' பைப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சாலையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிந்த அவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கியானி மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து அடித்ததை உறுதி செய்தனர். அவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.