போராட்டத்தை துாண்டுகின்றனர்கல் குவாரி உரிமையாளர்கள் புகார்

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருப்பூர்:சமூக ஆர்வலர் என்ற போர்வையில், சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து, போராட்டத்தை துாண்டிவிடுவதாக, கல் குவாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி, கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், சமூக ஆர்வலர் என்ற போர்வையில், சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து, குவாரி அருகே வசிப்போரை துாண்டிவிட்டு,
போராட்டத்தை துாண்டுகின்றனர்கல் குவாரி உரிமையாளர்கள் புகார்

திருப்பூர்:சமூக ஆர்வலர் என்ற போர்வையில், சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து, போராட்டத்தை துாண்டிவிடுவதாக, கல் குவாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி, கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், சமூக ஆர்வலர் என்ற போர்வையில், சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து, குவாரி அருகே வசிப்போரை துாண்டிவிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.உரிமத்தை ரத்து செய்யும் அளவுக்கு, விதிமீறல் எதுவும் நடக்கவில்லை. கடந்த, 2013க்கு பிறகு துவங்கிய குவாரிகள், சட்ட ரீதியான நிபந்தனைகளை பின்பற்றி வருகின்றன. அதற்கு முன், பல ஆண்டுகளாக இயங்கும் ஆலைகளுக்கு இவ்விதிமுறை பொருந்தாது. புதிய குவாரிகள், விதிமுறைகளை சரிவர பின்பற்றி வருகின்றன.பொய் காரணம் கூறி, குவாரியை தடை செய்துள்ளனர். நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக உள்ள, கல் குவாரி தொழிலை அடியோடு முடக்க முயற்சிக்கின்றனர்; மோசமான செயலில் ஈடுபடுவோரை முறையாக தண்டிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மனுக்கள் வாங்கி கொண்டிருந்த டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கல் குவாரி உரிமையாளர்களிடம் பேசி, ''சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X