உணவில் விஷம் வைத்து நாய்கள் கொலை

Added : செப் 13, 2022 | |
Advertisement
வடவள்ளி:நாகராஜபுரத்தில், உணவில் விஷம் கலந்து, 5 தெரு நாய்களை கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.வீரகேரளம் அடுத்த நாகராஜபுரம் -- பேரூர் சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்டில் வசித்து வருபவர் பாபுராஜ், 47. பிளைவுட் கம்பெனியில் ஏஜென்சி எடுத்து நடத்துகிறார். இவர் தனது அபார்ட்மென்ட் அருகில் உள்ள, தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்துள்ளார்.வழக்கம்போல நேற்று

வடவள்ளி:நாகராஜபுரத்தில், உணவில் விஷம் கலந்து, 5 தெரு நாய்களை கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.வீரகேரளம் அடுத்த நாகராஜபுரம் -- பேரூர் சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்டில் வசித்து வருபவர் பாபுராஜ், 47. பிளைவுட் கம்பெனியில் ஏஜென்சி எடுத்து நடத்துகிறார். இவர் தனது அபார்ட்மென்ட் அருகில் உள்ள, தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்துள்ளார்.வழக்கம்போல நேற்று முன்தினம் காலை, நாய்களுக்கு உணவளிக்க சென்றுள்ளார். அப்போது, வழக்கமாக வரும் நாய்களில் சிலவற்றை காணவில்லை. இதனால், சந்தேகமடைந்த பாபுராஜ், நாகராஜபுரம் -- பேரூர் சாலையில் சென்று தேடி உள்ளார்.அப்போது, சாலையோரத்தில் ஐந்து நாய்கள் உயிரிழந்து கிடந்தன. நாய்களுக்கு, யாரோ உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. பாபுராஜ், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X