3 டன் ரேஷன் அரிசி பதுக்கல்:கண்டுபிடித்த பொதுமக்கள் 

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர், பட்டுக்கோட்டையார் நகர், சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி அதிகளவில் பதுக்கி வைப்பதாகவும், விற்பனை செய்வதாகவும் அப்பகுதியினர் தெரிவித்து வந்தனர்.நேற்றிரவு, அப்பகுதியில் அரிசி பல மீட்டர் துாரம் சிதறி கிடந்தது. பின் தொடர்ந்து மக்கள் பார்த்தததில், அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அரிசி மூட்டை மூட்டையாக இருந்ததை பார்த்து
3 டன் ரேஷன் அரிசி பதுக்கல்:கண்டுபிடித்த பொதுமக்கள் 

திருப்பூர்:திருப்பூர், பட்டுக்கோட்டையார் நகர், சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி அதிகளவில் பதுக்கி வைப்பதாகவும், விற்பனை செய்வதாகவும் அப்பகுதியினர் தெரிவித்து வந்தனர்.நேற்றிரவு, அப்பகுதியில் அரிசி பல மீட்டர் துாரம் சிதறி கிடந்தது. பின் தொடர்ந்து மக்கள் பார்த்தததில், அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அரிசி மூட்டை மூட்டையாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த தி.மு.க., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., கட்சியினர் சம்பந்தப்பட் வீட்டை முற்றுகையிட்டனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பல ஆண்டாக ரேஷன் அரிசி கடத்தி விற்கின்றனர். நாங்கள் கேட்டால், மோசமாக அரிசி போடுகின்றனர். தற்போது பிடிபட்டுள்ள அரிசியின் தரம் நன்றாக உள்ளது.கடத்தி, விற்பதற்கும் மட்டும் நல்ல அரிசி விற்பது குறித்து, கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.தகவல் அறிந்து, குடிமை பொருள் வழங்கல் பிரிவு ஆய்வாளர் கார்த்திக், உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏறத்தாழ, மூன்று டன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X