'கோவையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த ஒருங்கிணைப்பு வேண்டும்'

Added : செப் 13, 2022 | |
Advertisement
கோவை:'கோவை நெக்ஸ்ட்' துவக்க விழா, நேற்று லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது. விழாவில், சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் முன்னாள் தலைவர் ரவிசாம் வரவேற்றார். இதுவரை கோவையின் நிலை குறித்து, சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் துணைத்தலைவர் சங்கர் வாணவராயர் விளக்கினார்.துவக்க விழாவில், சி.ஐ.ஐ., கோவை கிளையின் தலைவர் பிரசாந்த் பேசியதாவது:கோவையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவது

கோவை:'கோவை நெக்ஸ்ட்' துவக்க விழா, நேற்று லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது. விழாவில், சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் முன்னாள் தலைவர் ரவிசாம் வரவேற்றார். இதுவரை கோவையின் நிலை குறித்து, சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் துணைத்தலைவர் சங்கர் வாணவராயர் விளக்கினார்.துவக்க விழாவில், சி.ஐ.ஐ., கோவை கிளையின் தலைவர் பிரசாந்த் பேசியதாவது:கோவையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவது குறித்து, கடந்த 15 மாதங்களாக பல்வேறு தொழில்துறையின் முன்னோடிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டோம். கோவையின் வேகமான வளர்ச்சிக்கு தேவையான, ஐந்து முக்கிய அம்சங்கள் இதில் உருவாக்கப்பட்டன.கோவையில் உள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவற்றோடு மதிப்பு கூட்டு பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். தற்போதுள்ள தொழில்கள் தவிர அதிக வாய்ப்புகள் உள்ள தொழில்களை இங்கு தொடங்க வேண்டும்.குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ்சில் கவனம் செலுத்தலாம். ஸ்டார்ட் அப் களை ஊக்கப்படுத்த வேண்டும். கோவை நகரில் பெரும் அளவில் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற்சாலை எதுவும் இல்லை. இதை போக்க வெளிநாட்டு நேரடி முதலீட்டை கவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கோவையில் உள்ள, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பற்றி விளக்கம் கொடுத்து, கோவையின் பெயரை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரமாக, கோவை அருமையான இடமாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.முதல் நிலை நகரங்களுக்கான வசதிகளுடன், இரண்டாம் நிலை நகரமாக கோவை உள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் உள்ள கோவையில் தொழில் தொடங்க, பெரும் தொழில் நிறுவனங்களுடன் பேச்சு நடத்த சி.ஐ.ஐ., முயன்று வருகிறது.தமிழகத்தின் பொருளாதாரத்தில், கோவை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கோவையின் பொருளாதாரத்தை உயர்த்த தொழில் அமைப்புகள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, புதிய செயலாக்க திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, பிரசாந்த் பேசினார்.சி.ஐ.ஐ.,கோவை கிளை முன்னாள் தலைவர் அர்ஜூன் பிரகாஷ், சுந்தர்ராமன், ஜெய்ராம் வரதராஜ், கரூர் வைஸ்யா பாங்க் தலைமை செயல் அதிகாரி ரமேஷ்பாபு, சி.ஐ.ஐ., தென்மண்டல தலைவர் கமல்பாலி, பாரத் பயோடெக் இணை நிறுவனர் சுசித்ரா கே எல்லா உள்ளிட்டோர் பேசினர்.சி.ஐ.ஐ., சார்பில் கோயம்புத்துார் நெக்ஸ்ட் இணையம், அறிக்கை, காணொளி படம் உள்ளிட்டவற்றை, கலெக்டர் சமீரன் வெளியிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X