கோவிலை அகற்ற கோர்ட் தீர்ப்பு: கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு

Added : செப் 13, 2022 | |
Advertisement
போத்தனூர்;கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 1 விரிவு பகுதியிலுள்ள சிவன் கோவிலை அகற்ற, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் I மற்றும் விரிவு பகுதி உள்ளது. இதில் 43 சென்ட் இடம் நர்சரி பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக வினாயகர், முருகன், சிவன் கோவில்கள் சுமார் நான்காயிரம்
கோவிலை அகற்ற கோர்ட் தீர்ப்பு: கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு

போத்தனூர்;கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 1 விரிவு பகுதியிலுள்ள சிவன் கோவிலை அகற்ற, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் I மற்றும் விரிவு பகுதி உள்ளது. இதில் 43 சென்ட் இடம் நர்சரி பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக வினாயகர், முருகன், சிவன் கோவில்கள் சுமார் நான்காயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன.இச்சூழலில், கோவிலை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜதுரை என்பவர், வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவிலை அகற்ற, கோர்ட் வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் செயற்பொறியாளர், கோவிலின் தலைவர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை. இறுதியாக கடந்த, 30ல் அனுப்பிய கடிதத்தில் இன்று(13.09.2022) கோவில், போலீஸ், வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.இத்தகவலறிந்த அப்பகுதியினர், தி.மு.க., கவுன்சிலர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள், கோவிலுக்கு வந்து பக்தி பாடல்களை பாட ஆரம்பித்தனர். தகவலறிந்த வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் எட்வின் சுந்தர் சிங், தாசில்தார் பர்சானா, போத்தனூர் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் வசந்தராஜன், மாநகர் மாவட்ட வி.எச்.பி. துணை தலைவர் சரவணகுமார் மற்றும் ஹிந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.'கோவிலை அகற்றாவிடில், கோர்ட் அவமதிப்பு வழக்கு போடுவர். ஆதலால் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என செயற்பொறியாளர் கூறினார். மக்கள் ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டருடன் பேசி முடிவெடுப்பதாக, செயற்பொறியாளர் கூறிச் சென்றார்.முன்னாள் கவுன்சிலர் (தி.மு.க.) மகாலிங்கம் கூறுகையில், "இக்கோவில் அனைவரின் ஒத்துழைப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் தொடர்ந்த வழக்கிற்காக கோவிலை அகற்ற அனுமதிக்க மாட்டோம். அனைத்து அரசியல் கட்சியினர், ஹிந்து அமைப்பினர் உறுதுணையாக நிற்போம்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X