மாவட்டத்தில் நாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாடுபாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிப்பு| Dinamalar

மாவட்டத்தில் நாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாடுபாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிப்பு

Added : செப் 13, 2022 | |
உடுமலை;மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை அலட்சியத்தால், திருப்பூர் மாவட்டத்தில் நாய்க்கடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்த சுகாதார

உடுமலை;மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை அலட்சியத்தால், திருப்பூர் மாவட்டத்தில் நாய்க்கடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்த சுகாதார நிலையத்துக்கு சென்றால், 'அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்; எங்களிடம் தடுப்பூசி இல்லை,' என அனுப்பி வைக்கின்றனர்.பெரிச்சிபாளையத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள், 'தடுப்பூசி இருப்பு இல்லை; பெயரை பதிவு செய்து விட்டு செல்லுங்கள்; தடுப்பூசி வந்தால், அழைக்கிறோம்,' எனக் கூறி அனுப்புகின்றனர்.நாய்க்கடிக்கு ஆளானவர்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்று, ஆயிரக்கணக்கில் தொகை செலுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய பரிதாப நிலை உள்ளது.மாவட்டத்தில் மருந்துகள் தருவிப்பு மற்றும் வினியோகத்தை பொறுத்தவரை மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொறுப்பு அலுவலர்களாக செயல்படுகின்றனர்.சென்னையில் இருந்து குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மருந்து, தடுப்பூசிகள் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், தடுப்பூசி மருந்து, நோயாளிகளுக்கு கிடைக்காமல் உள்ளது.சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமாரிடம் கேட்டபோது, ''ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கவில்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கிறோம். வரும் நாட்களில் கூடுதலாக தடுப்பூசி மருந்தை பெற்று, தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.திருப்பூர் மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன் கூறுகையில், ''தடுப்பூசிக்கான தொகை ஒதுக்கியிருந்தால், குடோனில் இருந்து தடுப்பூசி உடனடியாக எடுத்து வந்து நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும். நிதி ஒதுக்கீட்டில் தாமதம் நிலவுவது குறித்தும், நாய்க்கடி தடுப்பூசி வேண்டுமென கேட்டும், இரண்டு முறை மருத்துவத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,''என்றார்.மருத்துவத்துறை இணை இயக்குனர் பிரேமலதாவிடம் கேட்டபோது, ''நாய்க்கடி தடுப்பூசி உட்பட, தேவையான அனைத்து தடுப்பூசி மருந்துகளும் இருப்பில் உள்ளன. மருந்துக்கான தொகையை செலுத்தினால், தேவையான அளவு எடுத்துச்செல்லலாம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X