சப் ஜூனியர் சிலம்பம்கோவை அணி சாம்பியன்

Added : செப் 13, 2022 | |
Advertisement
கோவை;கற்பகம் நிகர்நிலை பல்கலையில் நடக்கும் மாநில அளவிலான சிலம்ப போட்டியில், கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கற்பகம் நிகர்நிலை பல்கலை இணைந்து நடத்தும், மாநில அளவிலான சப் ஜூனியர் சிலம்ப போட்டி, ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ
சப் ஜூனியர் சிலம்பம்கோவை அணி சாம்பியன்

கோவை;கற்பகம் நிகர்நிலை பல்கலையில் நடக்கும் மாநில அளவிலான சிலம்ப போட்டியில், கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கற்பகம் நிகர்நிலை பல்கலை இணைந்து நடத்தும், மாநில அளவிலான சப் ஜூனியர் சிலம்ப போட்டி, ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு, ஒன்பது எடை பிரிவுகளில், கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு உள்ளிட்ட, 13 போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், கோவை மாவட்ட அணி, அதிகபட்சமாக, 84 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடத்தை, 38 புள்ளிகளுடன் விருதுநகர் அணியும், மூன்றாம் இடத்தை 37 புள்ளிகளுடன் திருநெல்வேலி அணிகளும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, பதக்கம் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X