'நீட்' தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி ஏன்?

Updated : செப் 13, 2022 | Added : செப் 13, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட, 3 சதவீதம் குறைந்துள்ளது இது குறித்து கல்வியாளர் சங்கரநாராயணன் கூறியதாவது:தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் தகுதியும், திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, இரண்டு விஷயங்களை செய்தது. ஒன்று, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய
 'நீட்' தேர்வு, தமிழகம், அரசு பள்ளி ,மாணவர்கள்

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட, 3 சதவீதம் குறைந்துள்ளது இது குறித்து கல்வியாளர் சங்கரநாராயணன் கூறியதாவது:தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் தகுதியும், திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, இரண்டு விஷயங்களை செய்தது. ஒன்று, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய அளவிலான பாட திட்டத்துக்கு இணையாக தமிழக பாட திட்டத்தையும் தரம் உயர்த்த ஏற்பாடு செய்தது.

கடந்த 2019ல் நடந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் 90 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள், தமிழக பாட திட்டத்தில் இடம் பெற்றதே இதற்கு சான்று என, கல்வியாளர்கள் பலரும் குறிப்பிட்டனர். இரண்டாவது, அரசு பள்ளிகளில், சிறப்பு நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனாலும், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில்

ஓரளவுக்கு தேர்ச்சி அடைய துவங்கினர்.


படிக்கவில்லைஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த நடைமுறை முழுமையாக தடைபட்டது. 'கொரோனா'வை காட்டி, 2019ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி, 'ஆல் பாஸ்' வாயிலாக பிளஸ் 1க்கு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தான், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்புக்கு பின் நீட் தேர்வு எழுதினர். கொரோனாவால் பள்ளிக்கே வராத அவர்கள், பிளஸ் 1 பாடத் திட்டங்களை முழுமையாக படிக்கவில்லை. இந்த ஆண்டும், ஏழு மாதங்களுக்கு பள்ளிகள் இயங்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு முந்தைய கடைசி மூன்று மாத காலம் மட்டுமே, அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.


latest tamil newsஅங்கும் பாடங்கள் முழுமையாக சொல்லி கொடுக்கப்படவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர், முழுமையாக பாட திட்டங்களை படிக்காமலேயே பிளஸ் 2 பொது தேர்வை எழுதினர். அதே நிலையிலேயே நீட் தேர்வையும் எழுத, பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தோல்விடைந்தனர். சொல்லப்போனால், நீட் தேர்வெழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 80 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்துள்ளனர். மீதம் இருக்கும் 20 சதவீதம் பேரில் இருந்து தான், அரசு வழங்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.


யதார்த்தம்அப்படியென்றால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தகுதி மற்றும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். என்னதான் இட ஒதுக்கீட்டில் சென்றாலும், அவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் தடுமாறும் நிலையே யதார்த்தம்.
கடந்த காலங்களில், மருத்துவ படிப்பின் முதல் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் நிலை மிகவும் மோசம் என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை கழக தேர்வுத்துறை கூறுகிறது.இது ஒரு பக்கம் என்றால், இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியாமல் போனதற்கான மிக முக்கிய காரணம், அரசியல்வாதிகள் கொடுக்கும் பொய்யான வாக்குறுதிகள் தான். இதை நம்பியே, அரசு பள்ளி மாணவர்கள் பலரும், முழுமையாக நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டனர். பெற்றோருக்கும் இப்படியொரு குழப்பம் இருந்தது.மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வு தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 112 ஆக இருந்தது, இந்த ஆண்டு 94 ஆக குறைந்து விட்டது. அதாவது 720 மதிப்பெண்களுக்கு நடக்கும் நீட் தேர்வில், 94 மதிப்பெண் பெற்றிருந்தாலே, தேர்ச்சி என்ற நிலையை எட்டி விடுகிறது.

இந்த மதிப்பெண்ணை கூட பெற முடியாமல் தான், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.தனியார் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. இதனால், அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் தனியார் பள்ளி மாணவர்கள் தயாராகின்றனர். இது போன்ற எந்த பயிற்சி வகுப்பும் இல்லாததாலேயே, அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது, எப்படி தயாராவது என புரியாமல், குழப்பம் அடைகின்றனர். எங்கே தோல்வி வந்துவிடுமோ என்ற பதற்றத்தில், தற்கொலை செய்து கொள்கின்றனர்.


குறைய தான் செய்யும்அரசு பள்ளிகளில் பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. பல பள்ளிகளில், பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாததும் பெரும் குறை. கொரோனா காலத்தில் தனியார் பள்ளி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்புகளில் தொடர்ந்து பாடங்களை படித்தனர். நீட் தேர்வுக்கான வகுப்புகளிலும் ஆன்லைன் வாயிலாகவே கலந்து கொண்டனர். படிப்பு தொடர்ந்தபடி இருந்தது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி 'டிவி' வாயிலாகவே பாடம் எடுக்கப்பட்டது.

மாணவர்கள் பாடங்களை கவனிக்கின்றனரா, புரிந்து கொள்கின்றனரா என எதுவும் தெரியாமல் கல்வி 'டிவி' வகுப்புகள் கடமைக்கு நடத்தப்பட்டன.

என்னதான் என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டத்தை விட, கூடுதல் தரத்தோடு, தமிழக பாட திட்டத்தின் நிலை உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு பள்ளிகளில் அடிப்படை விஷயங்களை செய்யாத வரை, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைய தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-செப்-202212:36:21 IST Report Abuse
duruvasar ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஒரு சில ஆயிரம் குடும்பங்கள் பரம்பரையாக சுகபோகமாக வாழ்வதற்க்காக செய்யப்படும் சூழ்ச்சிகள் தான் திராவிட மடலின் முக்கிய குறிக்கோள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-செப்-202212:31:08 IST Report Abuse
duruvasar ஒரே காரணம் தான் . தமிழர்களை முட்டாள்களாக வைத்து சாதி அடிப்படையில் பிரித்து வைப்பதுதான் திராவிட சித்தாந்தம் . இப்படி செய்தால் தான் தங்களை சேர்ந்த சில ஆயிரம் குடும்பங்கள் சுகபோக வாழ்க்கையை என்றும் வாழலாம் என்பதுதான் இதன் பின்னணி .
Rate this:
Cancel
Muralidharan S - Chennai,இந்தியா
13-செப்-202210:29:02 IST Report Abuse
Muralidharan S மிகவும் சரியாக சொல்லி இருக்கிறார்.. தமிழ் நாட்டில் மாநில பாட திட்டத்தின் தரத்தை குறைத்து குறைத்து, மாணவர்கள் இடையே பொய் நம்பிக்கைகளை விதைத்து, அனைவரும் தேர்ச்சி என்று ஒவ்வொரு வருடமும் செய்து, கல்வியை மாறி மாறி இரண்டு திராவிட கட்சிகளும் நாசம் செய்து விட்டனர். அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பாரிக்க அரசியல் என்ற முதலீடு இல்லாத வியாபாரம் இருக்கிறது.. ஆனால் மாணவர்களின் வாழ்க்கை??? பெரிய கேள்விகுறி ஆக்கிவிட்டனர். திராவிட மாடல் ஆட்சியில் பள்ளி மாணவிகள் சிலரும் கூட டாஸ்மாக் மது பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது மிகவும் வேதனை பட வைக்கிறது. பள்ளி மாணவர்கள் போதை பொருட்களுக்கும் அடிமை ஆகி வருகின்றனர் ... அரசியல் வாதிகளே இந்த வியாபாரங்களை உடந்தை என்ற செய்திகளும் வருகிறது. அது சரி... படிக்காத மக்கள் தொகை பெருகினால்தானே இது போன்ற திராவிட குடும்ப ஆட்சிகள் / மாடல்கள் தொடர்ந்து... அரசியல் வாதிகள் கல்லா கட்ட முடியும்.. எல்லோரும் படித்து முன்னேறி விட்டால், இவர்களுக்கு எல்லாம் யார் வோட்டு போடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X