சாலக்குடிக்கு செல்லும்அரசு பஸ் திடீர் நிறுத்தம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இருந்து, சாலக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், இருமாநில மக்கள் கவலையடைந்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று ரசிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மக்கள் அதிக அளவில் சாலக்குடிக்கு

வால்பாறை:வால்பாறையில் இருந்து, சாலக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், இருமாநில மக்கள் கவலையடைந்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று ரசிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மக்கள் அதிக அளவில் சாலக்குடிக்கு செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சாலக்குடிக்கு பஸ் இயக்கப்பட்டது. பஸ் விபத்துக்குள்ளானதால், சாலக்குடிக்கு பஸ் இயக்கப்படவில்லை.இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சாலக்குடிக்கு மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால், தமிழக, கேரள மாநில மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், இந்த பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால், இருமாநில மக்களும் கவலையடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு தனியார் பஸ் இரண்டும், கேரள மளுக்கப்பாறையிலிருந்து அம்மாநில அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன.இதனால், வால்பாறையிலிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்சில் கலெக் ஷன் மிக குறைவாக உள்ளது. எனவே, சாலக்குடி இடையே சனி, ஞாயிறு மட்டும் அரசு பஸ் இயக்கப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X