உதவி கேட்க நாடவேண்டியது இறைவனையே! சுவாமி வித்தியானந்த சரஸ்வதி சொற்பொழிவு 

Added : செப் 13, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;''நாம் உதவி கேட்டு நாட வேண்டியவர் இறைவன் தான்; அவரிடம் பக்தி செலுத்துங்கள்,''என ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம் ஆச்சார்ய சுவாமி வித்தியானந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார்.பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில், 'கீதை சொல்லும் வாழ்க்கையை, பக்திமயமாக ஆக்குவது எப்படி?' என்ற தலைப்பில், ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம், ஆச்சார்ய சுவாமி வித்தியானந்த சரஸ்வதி
உதவி கேட்க நாடவேண்டியது இறைவனையே! சுவாமி வித்தியானந்த சரஸ்வதி சொற்பொழிவு 

பொள்ளாச்சி;''நாம் உதவி கேட்டு நாட வேண்டியவர் இறைவன் தான்; அவரிடம் பக்தி செலுத்துங்கள்,''என ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம் ஆச்சார்ய சுவாமி வித்தியானந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார்.பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில், 'கீதை சொல்லும் வாழ்க்கையை, பக்திமயமாக ஆக்குவது எப்படி?' என்ற தலைப்பில், ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம், ஆச்சார்ய சுவாமி வித்தியானந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார்.சிரவனம், கீர்த்தனம், மனனம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சாக்யம், ஆத்ம நிவேதனம் என்ற ஒன்பது விதமான பக்திகளை, கதைகள் வாயிலாக விளக்கினார்.அதன்பின், அவர் பேசியதாவது:ஆர்த்தன், அர்த்தார்த்தி, ஜிக்ஞாஷு, ஞானி என நான்கு விதமான பக்தர்கள் உள்ளனர். தன்னுடைய கஷ்டத்துக்காக இறைவன் மீது பக்தி செலுத்துபவன் 'ஆர்த்தன்'. இந்த காரியம் நிகழ வேண்டும் என சங்கல்பத்தோடு பக்தி செலுத்துபவன், 'ஆர்த்தார்த்தி'.இறைவனைப் பற்றி அறிய முற்படுவதும், உண்மையைத் தேடி பல குருமார்களையும், சாஸ்திரங்களையும் நாடுபவன் 'ஜிக்ஞாஷு'. தன்னைப் பற்றிய முழுமையை அறிந்தவன், 'ஞானி' என நான்கு வித பக்தர்கள் உள்ளனர்.பக்தர்களில் நான் ஞானியாக இருக்கிறேன் என கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார். ஞானி எனக்கு பிரியமானவன், அவன் என்னை விட்டு வேறுபட்டவன் அல்ல. நானே -அவன், அவனில் -நான்; தன்னைப் பற்றிய அறியாமை நீங்கியவன்; தன் அறிவில் திளைத்தவன் ஞானி.நாம் யாரிடம் உதவி கேட்க வேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும். உதவியை நாடுவது அறிவாளியின் லட்சணம்; யாரால் அந்த உதவியைத்தர முடியுமோ, அவரிடம் நாம் நாடிப்பெற வேண்டும். அவ்வாறு நாம் உதவி கேட்க நாட வேண்டியது இறைவனிடம் தான்; அவரிடம் பக்தி செலுத்துவோம்.இந்த பிரபஞ்சம் யாவும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார். இருப்பதெல்லாம் இறைவனே என்ற மகா வாக்கியத்தை, குருவிடமும், -சாஸ்திரத்தை நாடியும் அறிந்து கொள்வதே, மனித பிறவியின் சிறப்பாகும்.இவ்வாறு அவர் பேசினார்.நிறைவாக பூஜ்ய சுவாமி ததேவானந்த சரஸ்வதி அருளாசி வழங்கினார். விழாவில் பக்தர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X