சிஞ்சுவாடி விநாயகர் கோவில் நிலம் மீட்பு; ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை

Added : செப் 13, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சிஞ்சுவாடியில் ஆக்கிரமிப்பில் இருந்த, 3.25 நிலத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர்.பொள்ளாச்சி, சிஞ்சுவாடியில், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஜம்பே நாயக்கர் காலத்தில், 12.16 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலம் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இதற்கான ஏலம் கடந்த சில மாதங்களுக்கு முன்
சிஞ்சுவாடி விநாயகர் கோவில் நிலம் மீட்பு; ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சிஞ்சுவாடியில் ஆக்கிரமிப்பில் இருந்த, 3.25 நிலத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர்.பொள்ளாச்சி, சிஞ்சுவாடியில், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஜம்பே நாயக்கர் காலத்தில், 12.16 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலம் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இதற்கான ஏலம் கடந்த சில மாதங்களுக்கு முன் விடப்பட்டது. மொத்தமுள்ள நிலத்தில், மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, தென்னந்தோப்பாக மாற்றி இருந்தார். அந்த இடத்தை நேற்று செயல் அலுவலர் சீனிவாசன் சம்பத் மற்றும் அதிகாரிகள் மீட்டு, நேற்று அறிவிப்பு பலகை வைத்தனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 12.16 ஏக்கர் நிலம், குண்டலப்பட்டியில் உள்ளது. தற்போது அந்த நிலம் ஏலம் விடப்பட்டது. அதில், 3 ஏக்கர் நிலம், டாக்டர் பங்கஜம் என்பவர், நீண்ட நாட்களுக்கு தனக்கே குத்தகைக்கு விட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முறையாக ஏலம் விடப்பட்டுள்ளது எனக்கூறி, டாக்டர் தொடர்ந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்ததையடுத்து கம்பி வேலி அகற்றிக்கொள்ள அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது, அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வைத்துள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X