நீலகிரி வழியாக கஞ்சா கடத்தல்: கேரள சோதனை சாவடியில் சிக்கிய கும்பல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
பந்தலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் வழியாக கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி சென்ற ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலுார் பகுதிகள், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ளன. இங்குள்ள, சில சோதனை சாவடிகளில் முறையாக வாகன சோதனை இல்லாததால், கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் (11-ம் தேதி)
நீலகிரி வழியாக கஞ்சா கடத்தல்: கேரள சோதனை சாவடியில் சிக்கிய கும்பல்

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் வழியாக கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி சென்ற ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலுார் பகுதிகள், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ளன. இங்குள்ள, சில சோதனை சாவடிகளில் முறையாக வாகன சோதனை இல்லாததால், கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் (11-ம் தேதி) கர்நாடகாவிலிருந்து, கூடலுார், பந்தலுார், சோலாடி சோதனை சாவடி வழியாக, கேரள மாநிலம் மேப்பாடிக்கு பைக்கில் கடத்தப்பட்ட, 6 கிலோ கஞ்சாவை, கேரளா போலீசார் பறிமுதல் செய்து, நாசிக், 26, மணி, 25 ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல், பெங்களூருவில் இருந்து, கூடலுார் நாடுகாணி சோதனை சாவடியை கடந்து, கேரளா வழிக்கடவு பகுதிக்கு சென்ற ஜீப்பில் கடத்தி செல்லப்பட்ட, 100 கிராம் விலை உயர்ந்த போதை பொருளை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, மஞ்சேரியை சேர்ந்த அஸ்லாதீன், 31, அவரின் மனைவி ஷிப்னா, 22, நண்பர்கள் முகமது சதாத், 29, வழிகடவு பகுதியை சேர்ந்த கமாருதீன், 36, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, ஜீப், பைக், ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X