சித்து அரசு ஊழல்கள் மீது விசாரணை:பா.ஜ., தலைவர் கட்டீல் திட்டவட்டம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
மைசூரு-''கர்நாடகாவில் சித்தராமையா அரசு இருந்த போது நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்துவோம். இதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்,'' என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் ஊழல்கள் நடந்துள்ளன. இதுபற்றி ஆழமாக விசாரணை நடத்துவோம். ஆதாரங்களை திரட்டி வருகிறோம். தவறு
சித்து அரசு ஊழல்கள் மீது விசாரணை:பா.ஜ., தலைவர் கட்டீல் திட்டவட்டம்



மைசூரு-''கர்நாடகாவில் சித்தராமையா அரசு இருந்த போது நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்துவோம். இதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்,'' என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் ஊழல்கள் நடந்துள்ளன. இதுபற்றி ஆழமாக விசாரணை நடத்துவோம். ஆதாரங்களை திரட்டி வருகிறோம். தவறு செய்தவர்களை உள்ளே அனுப்புவோம்.காங்., அரசில் நடந்த அர்க்காவதி நில மறு அறிவிப்பு, மெத்தை ஊழல், மின்சாரத் துறை முறைகேடு என, பல்வேறு ஊழல்களை மூடி மறைக்க, சித்தராமையா முயற்சித்தார். இந்த ஊழல்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஒளித்து வைத்திருந்தார். இவற்றை நாங்கள் வெளியே எடுப்போம்.நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது, அவர் செய்த ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தோம்; போராட்டம் நடத்தினோம். நேர்மையானவராக இருந்திருந்தால், அவரே விசாரணை நடத்தியிருப்பார். ஆனால் அதை அவர் செய்யவில்லை.எந்த ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமல் எங்கள் அரசின் மீது, சித்தராமையா ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார். காங்., - எம்.பி., ராகுலும் கூட பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். காங்கிரஸ் மேலிட தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாநில தலைவர் எந்தெந்த வழக்கில், ஜாமினில் வெளியே உள்ளனர் என்பதை நினைத்து பார்க்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X