நேரடி நெல் விதைப்பில் மீஞ்சூர் விவசாயிகள் ஆர்வம்; கடந்த ஆண்டை விட 800 ஏக்கர் அதிகம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
பொன்னேரி--குறைந்த தண்ணீர் மற்றும் மருந்து தேவை, எதிர்பார்க்கும் மகசூல் கிடைப்பதால், உவர்ப்பு நீர் பகுதிகளில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு வாயிலாக, நெல் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டைவிட, தற்போது, 800 ஏக்கர் கூடுதலாக பயிரிடப்பட்டு உள்ளது.மீஞ்சூர் வட்டாரத்தில், சம்பா பருவத்தின்போது, 28 ஆயிரம் - -30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. கோளூர், திருப்பாலைவனம்,
நேரடி நெல் விதைப்பில் மீஞ்சூர் விவசாயிகள் ஆர்வம்; கடந்த ஆண்டை விட 800 ஏக்கர் அதிகம்



பொன்னேரி--குறைந்த தண்ணீர் மற்றும் மருந்து தேவை, எதிர்பார்க்கும் மகசூல் கிடைப்பதால், உவர்ப்பு நீர் பகுதிகளில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு வாயிலாக, நெல் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டைவிட, தற்போது, 800 ஏக்கர் கூடுதலாக பயிரிடப்பட்டு உள்ளது.மீஞ்சூர் வட்டாரத்தில், சம்பா பருவத்தின்போது, 28 ஆயிரம் - -30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது.இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், மழையை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட கிராமங்களில் வழக்கமாக, நெல் நாற்று விட்டு, மழையை எதிர்பார்த்து காத்திருப்பர். அக்டோபரில் மழை பொழிய துவங்கிய உடன் விளைநிலங்களை உழுது தயார்படுத்தி, நாற்றுக்களை பிடுங்கி நடுவர்.அதை தொடர்ந்து, நவம்பர் மாதங்களில் கடும் மழை பொழிவு இருப்பதால், நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும்.இதனால் வளர்ந்து வரும் நெற்பயிர்கள் அழுகி வீணாகும். இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதிலிருந்து மீளும் வகையில், இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் விளைநிலங்களை உழுது தயார்படுத்துகின்றனர். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பொழியும் சிறு மழையை கொண்டு, உழுது தயார் நிலையில் இருக்கும் விளைநிலங்களில் நெல் விதைகளை நேரடியாக துாவி விடுகின்றனர்.விதைகள், 15 நாட்களில் முளைத்து வளர்ச்சிக்கு தயாராகி விடுகின்றன. நேரடி நெல் விதைப்பால், நடவு கூலி, மருந்து செலவினம், தண்ணீர் தேவை குறைவதுடன், அதிக துார்களுடன் நெற்பயிர்கள் வளர்வதால், கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்களில் விதைகள் முளைத்து வருகின்றன. நேரடி நெல் விதைப்பு செய்வதில் ஆண்டுதோறும் விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு, 4,400 ஏக்கர் நிலங்கள் நேரடி நெல் விதைப்பு வாயிலாக பயிரிடப்பட்டிருந்தன. இந்தாண்டு, 800 ஏக்கர் கூடுதலாக, 5,200 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X