தரைப்பாலம் விரிவாக்க பணி துவக்கம்| Dinamalar

தரைப்பாலம் விரிவாக்க பணி துவக்கம்

Added : செப் 13, 2022 | |
ஆர்.கே.பேட்டை--ஆர்.கே.பேட்டை மற்றும் செல்லாத்துார் இடையே அமைந்துள்ள ஏரி, பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் கலங்கல், தென்கிழக்கு மூலையில், கிருஷ்ணாகுப்பம் கிராமம் அருகே உள்ளது. ஏரியின் உபரி நீர், மாநில நெடுஞ்சாலையின் வழியாக பாய்ந்து செல்கிறது.இதற்காக, சாலையின் இடையே தரைப்பாலம் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையின் போது, ஏரியில் இருந்து
தரைப்பாலம் விரிவாக்க பணி துவக்கம்



ஆர்.கே.பேட்டை--ஆர்.கே.பேட்டை மற்றும் செல்லாத்துார் இடையே அமைந்துள்ள ஏரி, பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் கலங்கல், தென்கிழக்கு மூலையில், கிருஷ்ணாகுப்பம் கிராமம் அருகே உள்ளது. ஏரியின் உபரி நீர், மாநில நெடுஞ்சாலையின் வழியாக பாய்ந்து செல்கிறது.இதற்காக, சாலையின் இடையே தரைப்பாலம் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையின் போது, ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், தரைப்பாலத்தை மூழ்கடித்து பாய்ந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.தரைப்பாலத்தின் கண்கள் போதுமான அளவிற்கு இல்லாததே காரணம். இதையடுத்து, இந்த தரைப்பாலத்தை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறையினர் ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, மாற்றுப்பாதை ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X