ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு; அனுமதி கோரி வழக்கு

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில், ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும்டி.ஜி.பி.,க்கு மனு அளிக்கப்பட்டது.ஆனால், எந்த முடிவும்
சென்னை, ஆர்எஸ்எஸ், சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம், Chennai, RSS, Chennai High Court, Tamil Nadu,

சென்னை : தமிழகத்தில், ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும்டி.ஜி.பி.,க்கு மனு அளிக்கப்பட்டது.ஆனால், எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த சுப்ரமணியன் உட்பட, ஒன்பது இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களில், 'மற்ற மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை' என கூறப்பட்டது.இம்மனுக்கள், நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராஜகோபால், எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் ரபுமனோகர் ஆஜராகினர்.

போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ''ஊர்வலத்துக்கு அனுமதி கேட்ட விண்ணப்பங்கள் குறித்து, 22ல் முடிவெடுக்கப்படும்,'' என்றார். இதையடுத்து, மனுவுக்குபதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X