அருப்புக்கோட்டையில் டெங்கு| Dinamalar

அருப்புக்கோட்டையில் டெங்கு

Added : செப் 13, 2022 | |
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையாக இருக்கிறது.அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் உள்ள மேட்டாங்கரையில் பலருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. தகவல் அறிந்த மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யசோதா, பூச்சியியல் வல்லுநர் சாந்தி தலைமையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அந்தப் பகுதி



அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையாக இருக்கிறது.அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் உள்ள மேட்டாங்கரையில் பலருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. தகவல் அறிந்த மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யசோதா, பூச்சியியல் வல்லுநர் சாந்தி தலைமையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்குள்ள பொதுமக்களிடம் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கி கூறினர்.மெத்தனமாக இருக்கும் நகராட்சி சுகாதார பிரிவு, நகர் முழுவதும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X