கேரள அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 44 பேர் காயம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
மூணாறு : கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் அருகே சாக்கோச்சி வளைவில் நேற்று காலை கேரள அரசு பஸ் கவிழ்ந்து வாளரா அருகில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குளமாம்குழியைச் சேர்ந்த சஜீவ்ஜோசப் 47, இறந்தார்.மூணாறு டிப்போவைச் சேர்ந்த கேரள அரசு பஸ் நேற்று காலை 5:00 மணிக்கு மூணாறில் இருந்து எர்ணாகுளத்திற்குச் சென்றது. ஓணம் விடுமுறை முடிந்து 60 பயணிகள் பஸ்சில்
கேரள அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 44 பேர் காயம்



மூணாறு : கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் அருகே சாக்கோச்சி வளைவில் நேற்று காலை கேரள அரசு பஸ் கவிழ்ந்து வாளரா அருகில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குளமாம்குழியைச் சேர்ந்த சஜீவ்ஜோசப் 47, இறந்தார்.மூணாறு டிப்போவைச் சேர்ந்த கேரள அரசு பஸ் நேற்று காலை 5:00 மணிக்கு மூணாறில் இருந்து எர்ணாகுளத்திற்குச் சென்றது.

ஓணம் விடுமுறை முடிந்து 60 பயணிகள் பஸ்சில் இருந்தனர். மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்த டிரைவர் பரமேஸ்வரன் 45, பஸ்சை ஓட்டினார்.கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் அருகே இரண்டாம் மைல் சாக்கோச்சி வளைவில் காலை 7:00 மணிக்கு பஸ் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றது. அப்போது எதிர்பாராத வகையில் பஸ் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பலத்த காயமடைந்த சஜீவ்ஜோசப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். டிரைவர் பரமேஸ்வரன், கண்டக்டர் கொல்லத்தைச் சேர்ந்த சுபாஷ் 46, ஆகியோர் உள்பட 44 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அடிமாலி, கோதமங்கலம் ஆகிய பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளத்தில் 50 அடி தூரம் உருண்ட பஸ் மரம் தட்டி நின்றதால் உயிர் பலி எண்ணிக்கை தவிர்க்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X