போலீஸ் செய்திகள்...

Added : செப் 13, 2022 | |
Advertisement
மது விற்ற மூவர் கைது தேனி: ராயப்பன்பட்டி அணைப்பட்டி கிழக்குத்தெரு ராஜசேகர் 32. இவர் ஆனைமலையன்பட்டி குளத்துக்கரை எதிரில் டூவீலரில் 30 மதுபாட்டில்களை சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கினார். கூடலுார் பேச்சியம்மன் கோயில் தெரு முருகன் 48. இதேப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் 59. இருவரும் அப்பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்தனர். கூடலுார் வடக்கு, ராயப்பன்பட்டி போலீசார்,



மது விற்ற மூவர் கைது

தேனி: ராயப்பன்பட்டி அணைப்பட்டி கிழக்குத்தெரு ராஜசேகர் 32. இவர் ஆனைமலையன்பட்டி குளத்துக்கரை எதிரில் டூவீலரில் 30 மதுபாட்டில்களை சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கினார். கூடலுார் பேச்சியம்மன் கோயில் தெரு முருகன் 48. இதேப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் 59. இருவரும் அப்பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்தனர். கூடலுார் வடக்கு, ராயப்பன்பட்டி போலீசார், மூவரையும் கைது செய்து, மதுபாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

மாரடைப்பால் கொத்தனார் பலிதேனி: சின்னமனுார் ரைஸ்மில் தெரு கொத்தனார் முருகேசன் 56. க.விலக்கு அருகே வீட்டில் பணியின் போது படபடப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோவில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.தீ பற்றி பெண் பலிதேவாரம்:- ாரம் வடக்கு தெருவை சேர்ந்த கணேசனின் மகள் கணேஷ்வரி 18 . இவர் 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஸ்டவ்வில் பால் காய்ச்சும் போது உடலில் தீ பற்றியுள்ளது. பலத்த காயமடைந்த கணேஷ்வரியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ம.நீ.ம., கட்சி நிர்வாகிகள் மீது வழக்குபோடி: போடியில், மக்கள் நீதி மய்யம் மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வருகையையொட்டி, அனுமதியின்றி நகர தலைவர் சிவமணிகண்டன் தலைமையில் மாவட்ட தலைவர் கணேஷ்குமார், நிர்வாகிகள் மணிகண்டன், தங்கராஜ் ஆகியோர் கட்சி கொடியுடன் போக்குவதற்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊர்வலமாக சென்று கொடியேற்றியதாக நகர தலைவர் சிவமணிகண்டன் உட்பட 5 பேர் மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மது பாட்டிலுடன் ஒருவர் கைதுதேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சேவுகப் பெருமாள் 45. வீட்டருகே 50 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் சேவுகப்பெருமானை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X