முருங்கைக்காய் கிலோ ரூ.100 ஆண்டிபட்டி விவசாயிகள் மகிழ்ச்சி

Added : செப் 13, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி : தேவை அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் கண்டமனூர், கடமலைக்குண்டு, கணேசபுரம், தெப்பம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, மரிக்குண்டு, எம்.சுப்புலாபுரம் மற்றும் வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி உள்ளது. இப்பகுதியில்
முருங்கைக்காய் கிலோ ரூ.100 ஆண்டிபட்டி விவசாயிகள் மகிழ்ச்சி



ஆண்டிபட்டி : தேவை அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் கண்டமனூர், கடமலைக்குண்டு, கணேசபுரம், தெப்பம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, மரிக்குண்டு, எம்.சுப்புலாபுரம் மற்றும் வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் முதல் தர முருங்கைக்காய்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து பெய்த மழை முருங்கை விளைச்சலுக்கு சாதகமானதால் தற்போது காய்ப்பு அதிகரித்துள்ளது.முகூர்த்த சீசன் தொடர்வதால் முருங்கை காய்களுக்கான தேவை அதிகரித்து மார்க்கெட்டில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் இருந்து தினமும் 100 டன் அளவிலான முருங்கை காய்கள் வெளியிடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சில வாரத்திற்கு முன் கிலோ ரூ.30 முதல் 40 வரை இருந்த முருங்கைக்காய் விலை தற்போது கிலோ ரூ.100 வரை உயர்ந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது: முருங்கைக்காய் சாகுபடியில் உரம், மருந்து செலவு அதிகமாகிறது. தொடர்ந்து மருந்து தெளிப்பு இருந்தால் மட்டுமே தரமான காய்ப்பு கிடைக்கும். முகூர்த்த காலங்களில் மட்டுமே முருங்கை காய்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X