எட்டு வழிச்சாலை: கருத்து கேட்புக்கு அனுமதி?

Added : செப் 13, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை : சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, அரசு அனுமதி அளிக்க உள்ளது.சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. இத்திட்டத்திற்கு, 7,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை பணிக்கு, 4,693 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கின. இதற்கு, சில அரசியல் கட்சிகள்
Chennai, Salem, Eight way road, சென்னை, சேலம்,  எட்டு வழிச்சாலை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, அரசு அனுமதி அளிக்க உள்ளது.

சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. இத்திட்டத்திற்கு, 7,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை பணிக்கு, 4,693 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கின. இதற்கு, சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


latest tamil news



தற்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, சாலை பணியை மாற்று வழியில் செயல்படுத்த, தி.மு.க., அரசு முன்வந்துள்ளது. எனவே, சாலை பணிகள் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

அதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சமரசம் பேச திட்டமிடப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் வி.கே.சிங்கிடம் எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Arunachalam - Salem,இந்தியா
13-செப்-202223:08:21 IST Report Abuse
K.Arunachalam மாற்று வழி என்று சொன்னால் யாருக்கோ பயப்பட வேண்டும் இல்லை என்றால் லஞ்சம் வாங்கிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
K.Arunachalam - Salem,இந்தியா
13-செப்-202222:46:24 IST Report Abuse
K.Arunachalam மாற்று வழி என்று சொன்னால், மாற்று வழியல் இருப்பவர்கள் விவசாயிகள் இல்லையா. அவர்களுக்கு டென்ஷன் கொடுக்க வேண்டாம் பழைய வழியல் போடவும்.
Rate this:
Cancel
Tamil - Trichy,இந்தியா
13-செப்-202216:22:58 IST Report Abuse
Tamil துபாயில் பதினாறு வழி சாலை வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நாம் இன்னும் நன்கு வழிக்கே டோல் வசூல் வேட்டை நடத்திக்கிட்டு இருக்கோம். நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கியத்துவமானது. விவசாயத்தை பாதிக்காத வகையில் மாற்று பாதையில் செயல்படுத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X