மகன்,மகளை கொன்று தாய் துாக்கிட்டு தற்கொலை| Dinamalar

மகன்,மகளை கொன்று தாய் துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 13, 2022 | |
விருத்தாசலம்-விருத்தாசலத்தில், குடும்ப பிரச்னையில் மகன், மகளை கொலை செய்துவிட்டு, தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்வராஜ் மகன் குமார், 51. லாரி மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் கரூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாஹிரா பானு, 40, என்பவரை
மகன்,மகளை கொன்று தாய் துாக்கிட்டு தற்கொலை

விருத்தாசலம்-விருத்தாசலத்தில், குடும்ப பிரச்னையில் மகன், மகளை கொலை செய்துவிட்டு, தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்வராஜ் மகன் குமார், 51. லாரி மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் கரூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாஹிரா பானு, 40, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது மகன் பரத், 13; மகள் மேகவர்ஷினி, 8. குழந்தைகள் இருவரும் விருத்தாச்சலம் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம்இரவு குடும்ப பிரச்னை காரணமாக தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. பின் குமார் வீட்டின் முன்பக்க அறையில் துாங்கச் சென்றார். சாஹிரா பானு இரண்டுகுழந்தைகளுடன் அறையில் துாங்கினார். காலை 8:00 மணி வரை அறை திறக்கப்படாமல் இருந்தது.சந்தேகமடைந்த குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தார். இரண்டு குழந்தைகளையும் புடவையால்துாக்கிட்டு கொலை செய்துவிட்டு, சாஹிரா பானுவும் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், மூவர் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர்.மகன், மகளை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X