மணலாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் சுருளி அருவியில் தொடரும் தடை| Dinamalar

மணலாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் சுருளி அருவியில் தொடரும் தடை

Added : செப் 13, 2022 | |
கம்பம்: +மணலாறு அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் தொடர்வதால், சுருளி அருவியில குளிப்பதற்கும் நடை தொடர்கிறது.மேகமலையில் ஹைவேவிஸ், மணவாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் சேகரமாகும் தண்ணீர் இரங்கலாறு அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுருளியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. கடந்தாண்டு மின்நிலையத்திற்கு தண்ணீர்


கம்பம்: +மணலாறு அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் தொடர்வதால், சுருளி அருவியில குளிப்பதற்கும் நடை தொடர்கிறது.மேகமலையில் ஹைவேவிஸ், மணவாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் சேகரமாகும் தண்ணீர் இரங்கலாறு அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுருளியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.



கடந்தாண்டு மின்நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் சேதமடைந்தது. எனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இதற்கிடையே ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக இங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. ஹைவேவிஸ் அணை தண்ணீர் மணலாறு அணையில் சேகரமாகிறது. மணவாறு அனணயின் மொத்த கொள்ளளவு 1492 மீட்டராகும். அதற்கு மேல் வரும் உபரி நீர் சுருளி அருவிக்கு திறந்து விடப்படுகிறது. மணலாறு அணையிலிருந்து சுருளி அருவிக்கு உபரி நீர் வருவது தொடர்வதால் சுருளி அருவியில் வெள்ளிப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையும் தொடர்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X