தென் மாநில மாநாட்டிற்கு அழைப்பில்லையா?முதல்வர் விளக்கம் அளிக்க சிவா வலியுறுத்தல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
புதுச்சேரி-'தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வருக்கு அழைப்பு விடுக்காதது, கொலை பாதக செயல்' என எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.அவரது அறிக்கை: -தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் புதுச்சேரி மாநிலம் சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை புறம்தள்ளி, கவர்னர் பங்கேற்றதன் மூலம், சூப்பர் சி.எம். ஆக அவர் செயல்படுவதை நிரூபித்துள்ளார்.



புதுச்சேரி-'தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வருக்கு அழைப்பு விடுக்காதது, கொலை பாதக செயல்' என எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.அவரது அறிக்கை: -தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் புதுச்சேரி மாநிலம் சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை புறம்தள்ளி, கவர்னர் பங்கேற்றதன் மூலம், சூப்பர் சி.எம். ஆக அவர் செயல்படுவதை நிரூபித்துள்ளார். கூட்டத்தில் கவர்னர் முன் வைத்த முக்கிய பிரச்னை, புதுச்சேரி வளர்ச்சி பற்றியது. கடந்த 2018- - 19ல் 4 சதவீதம், 2020- - 21ல் 10 சதவீதம் இருந்த மாநில வளர்ச்சி, இவர்கள் ஆட்சிக்கு வந்த 2022- - 23ம் ஆண்டில் (-)8 சதவீதம் பின்னோக்கி சென்றுள்ளது என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.சட்டசபை, ஏர்போர்ட், துறைமுக இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்புகளுக்கு நிதி வேண்டி, டில்லி சென்று கெஞ்சிவிட்டு வந்தனர். இதோ வந்துவிட்டது; அதோ வந்துவிட்டது என்றனர். எதுவுமில்லை என்பது கவர்னரின் ரூ. 2,200 கோடி நிதி கோரிக்கை வெளிச்சமாக்கி உள்ளது.இதே மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள அரசுடனான பிரச்னை குறித்து அம்மாநில முதல்வரிடம் முறையாக பேசியுள்ளார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம், மணல் எடுத்துவர அனுமதி ஆகிய பிரச்னைகள் தமிழக முதல்வரிடம் பேசி முடிக்கக் கூடியவை. புதுச்சேரி முதல்வர் தமிழக முதல்வரை ஒரு முறை சந்தித்து பேசினாலே இதற்கு தீர்வு கிடைக்கும். விளம்பரத்திற்காக கவர்னர், இன்றியமையாத பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவற்றை முன்னிலைப் படுத்தி உள்ளார். புதுச்சேரி முதல்வருக்கு தென்மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கொடுக்கவில்லை என முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதல்வரை அழைக்காமல் கவர்னரை மட்டும் அழைத்து இருந்தால் அது கொலை பாதக செயலாகும். இது குறித்த உண்மை நிலையை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும்.மாநில முதல்வரை புறம்தள்ளிவிட்டு கவர்னர் பங்கேற்பு என்பது ஒட்டுமொத்த புதுச்சேரி மாநில மக்களை அவமானப்படுத்தும் செயலாகும். மத்திய அரசின் இச்செயல் கண்டிக்கத் தக்கதாகும்.கூட்டணி தர்மம் வேறு. மாநில மக்களின் நலன் வேறு என்பதை முதல்வர் ரங்கசாமி உணர வேண்டும். வரும் காலங்களில், மக்கள் நமக்கு அளித்த ஜனநாயக உரிமையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X