இரு சக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் தீ வைப்பு

Added : செப் 13, 2022 | |
Advertisement
புதுச்சேரி-வில்லியனுார் அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வில்லியனுார், சங்கரன்பேட்டை, சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி,53; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 10ம் தேதி இரவு 10.00 மணிக்கு வீட்டின் போர்டிகோவில், ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர், யமகா ஆல்பா பைக்கை நிறுத்தி



புதுச்சேரி-வில்லியனுார் அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வில்லியனுார், சங்கரன்பேட்டை, சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி,53; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 10ம் தேதி இரவு 10.00 மணிக்கு வீட்டின் போர்டிகோவில், ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர், யமகா ஆல்பா பைக்கை நிறுத்தி வைத்திருந்தார்.அதிகாலை 1.30 மணிக்கு, வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். கென்னடி கதவை திறந்து பார்த்த போது, இரு வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன. தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில், 2 பைக்குகளும் எரிந்து சேதமாகியது. இது தொடர்பாக கென்னடி, மங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், அப்பகுதியை சேர்ந்த கந்தன் என்பவரும், நல்லாத்துாரை சேர்ந்த கார்த்தி, வேலு ஆகியோர் தனது மகன் விக்னேஷிடம் வாய்தகராறு செய்தனர். இதன் எதிரொலியாக பைக்கிற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார், கந்தன் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X