மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் துவங்கியது: வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகளுக்கு தீர்வு எப்போது?

Added : செப் 13, 2022 | |
Advertisement
புதுச்சேரி-எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கானவிண்ணப்ப விநியோகம் சென்டாக் இணையதளத்தில் நேற்று துவங்கியது. எனினும், விண்ணப்பக் கட்டணம்,அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போன்ற விபரங்கள் வெளியிடப்படாததால் மாணவர்களும் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக்
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் துவங்கியது: வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகளுக்கு தீர்வு எப்போது?

புதுச்சேரி-எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கானவிண்ணப்ப விநியோகம் சென்டாக் இணையதளத்தில் நேற்று துவங்கியது. எனினும், விண்ணப்பக் கட்டணம்,அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போன்ற விபரங்கள் வெளியிடப்படாததால் மாணவர்களும் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட 'நீட்' மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு, செப். 12ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என சென்டாக் அறிவித்து இருந்தது.


விண்ணப்பம் விநியோகம்


அதன்படி, சென்டாக் இணையதளத்தில் www.centacpuducheryy.in விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்), கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சுயநிதி இடங்கள் என தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.


கட்டணம் எவ்வளவு?


முதல் நாளான நேற்று ஆன்-லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டாலும், விண்ணப்பக் கட்டணம் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர்களிடம் குழப்பம் ஏற்பட்டது.அதேபோல், 'நீட்' மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தகவல் குறிப்பேடும் வெளியிடப்படவில்லை.அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இன்னும் அனுமதி கிடைக்காததால் வெளியிடப்படவில்லை.


அரசு ஒதுக்கீடு


நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு மற்றும் தனியார் ஒதுக்கீட்டு இடங்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.கடந்தாண்டு (2021-22) பிம்ஸ், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரிகள் தலா 56 இடங்களும், வெங்கடேஸ்வரா கல்லுாரி 58 சீட்டுகள் என மொத்தம் 170 எம்.பி.பி.எஸ்., சீட்கள் அரசு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.அதற்கு முந்தைய ஆண்டு (2020-21) இந்த மூன்று தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 450 எம்.பி.பி.எஸ்., சீட்டு களில் தலா 55 சீட்டுகள் வீதம் 165 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்பட்டது.


பேச்சுவார்த்தை


இந்தாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீடு சீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பேச்சுவார்த்தையில், கடந்தாண்டை காட்டிலும், 6 இடங்கள் வரை அதிகரித்து தர வேண்டும் என அரசு தரப்பில், தனியார் கல்லுாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.எனினும் இன்னும் சீட் எண்ணிக்கை இறுதி செய்யப்படாமல் உள்ளது.இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 131 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்படுகிறது. மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகள் 176 சீட்டுகளை வழங்கினால், இந்தாண்டு 307 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.


கல்விக் கட்டணம்


எம்.பி.பி.எஸ்., படிப்பினை பொறுத்தவரை கல்விக் கட்டணம் முன் கூட்டியே தெரிந்தால் தான், பெற்றோர்கள் பணம் புரட்ட முடியும். ஆனால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பினை நேற்று வரை அரசு வெளியிடவில்லை.எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் கடந்தாண்டே முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்த அனுமதிக்கவில்லை. இதனால் நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் திணறி வருகின்றன.அதனால் அவர்கள், அரசு இட ஒதுக்கீட்டினை இறுதி செய்யும் முன், கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


கோர்ட்டில் வழக்கு


இதற்கிடையே, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணமே, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பெறப்பட வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், இறுதி முடிவு தெரிந்தால் தான், தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் கல்விக் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடியும் என்பதால் அரசு மவுனம் காத்து வருகின்றது.இதன் காரணமாக எம்.பி.பி.எஸ்., கல்விக் கட்டணம் தொடர்பாக அறிவிப்பும் வெளியாக வில்லை.எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்பு சேர்க்கைக்கு, இப்படி வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகளுக்கு அரசு விரைவாக தீர்வு காண வேண்டும்.எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் முதலில் துவக்கினால் தான் அடுத்து, பொறியியல் மற்றும் கலை - அறிவியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை எவ்வித குழப்பமுமின்றி நடத்த முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X