கணவன் கண்டிப்பு; மனைவி மாயம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
காரைக்கால்-காரைக்காலில் வேறு நபருடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கோபமடைந்த மனைவி மாயமானார்.காரைக்கால், கோட்டுச்சேரி திருவேட்டக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சவரிநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயசீலி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஜெயசீலி அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது அவருக்கு, கோட்டுச்சேரி தொழிற்பேட்டையில் கார்டன் வேலை செய்யும்



காரைக்கால்-காரைக்காலில் வேறு நபருடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கோபமடைந்த மனைவி மாயமானார்.காரைக்கால், கோட்டுச்சேரி திருவேட்டக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சவரிநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயசீலி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஜெயசீலி அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது அவருக்கு, கோட்டுச்சேரி தொழிற்பேட்டையில் கார்டன் வேலை செய்யும் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த மனோகரன்(47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதை அறிந்த சவரிநாதன் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். அதன்பிறகும் மனோகரனுடன் பழக்கம் தொடர்ந்துள்ளது.இதனால் ஆத்திரடைந்த சவரிநாதன், டீக்கடையை காலி செய்துவிட்டு பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தார். வீட்டில் இருந்த ஜெயசீலி நேற்று முன்தினம் கோபித்துக்கொண்டு வெளியில் சென்றார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X