மகளுக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் தந்தை கைது| Dinamalar

மகளுக்கு பாலியல் தொல்லை'போக்சோ'வில் தந்தை கைது

Added : செப் 13, 2022 | |
அரியாங்குப்பம்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக தந்தை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.புதுச்சேரி, முதலியார்பேட்டை போலீஸ் சரகத்தை சேர்ந்தவர் 45 வயது கட்டடத் தொழிலாளி. இவருக்கு 40 வயதில் மனைவியும், 12 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், கட்டடத் தொழிலாளி தனது மூத்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.



அரியாங்குப்பம்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக தந்தை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.புதுச்சேரி, முதலியார்பேட்டை போலீஸ் சரகத்தை சேர்ந்தவர் 45 வயது கட்டடத் தொழிலாளி. இவருக்கு 40 வயதில் மனைவியும், 12 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், கட்டடத் தொழிலாளி தனது மூத்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும், மகள் குளிப்பதை, மறைந்திருந்து பார்த்துள்ளார். அதனைக் கண்டு திடுக்கிட்ட சிறுமி, தனது தாயிடம் கூறினார்.அவர், கணவரை கண்டித்துள்ளார். அதன்பிறகும் அவர், மீண்டும் மீண்டும் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து, கட்டடத் தொழிலாளியை கைது செய்தனர்.அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X