மேல்களவாயில் விரைவில் மேம்பாலம்; அமைச்சர் மஸ்தான் தகவல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
செஞ்சி-'தினமலர்' செய்தி எதிரொலியாக, மேல்களவாய் சாலை தரைப்பாலத்தில் அடைப்புகளை நீக்கி துார் வாரும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.செஞ்சி நகருடன் இணையும் சாலைகளில் முக்கியமானது மேல்களவாய் சாலை. இதன் குறுக்கே சங்கராபரணி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் துார்ந்ததால் குறைவான தண்ணீர் வந்தாலும் பாலத்தின் மீது வழிந்தோடி போக்குவரத்து துடிக்கப்படும்
மேல்களவாயில் விரைவில் மேம்பாலம்; அமைச்சர் மஸ்தான் தகவல்

செஞ்சி-'தினமலர்' செய்தி எதிரொலியாக, மேல்களவாய் சாலை தரைப்பாலத்தில் அடைப்புகளை நீக்கி துார் வாரும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.செஞ்சி நகருடன் இணையும் சாலைகளில் முக்கியமானது மேல்களவாய் சாலை. இதன் குறுக்கே சங்கராபரணி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் துார்ந்ததால் குறைவான தண்ணீர் வந்தாலும் பாலத்தின் மீது வழிந்தோடி போக்குவரத்து துடிக்கப்படும் நிலை இருந்தது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து அமைச்சர் மஸ்தான் தரைப்பாலத்தில் துார்வார நெடுஞ்சாலைத் துறையினருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திர தாஸ் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் கொண்டு மேல்களவாய் சாலை தரைப்பாலத்தில் இரண்டு பக்கமும் துார்ந்திருந்த மணல் மேடுகளை அகற்றினர்.பாலத்தின் கீழ் இருந்த குழாய்களில் இருந்த அடைப்புகளையும் அகற்றினர். இப்பணிகளை நேற்று மதியம் அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அப்போது அமைச்சர் கூறுகையில், 'அரசிடம் கொடுத்துள்ள செஞ்சி தொகுதிக்கான 10 முக்கிய தேவைகளில் முதன்மையானதாக மேல்களவாய் சாலை தரைப்பாலத்திற்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என கேட்டுள்ளேன். இதற்கு முன்னுரிமை கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, மிக விரைவாக மேம்பாலம் கட்டப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X