கடவுள் இல்லை வாசகம்: விளக்கம் கேட்கிறது கோர்ட் | Dinamalar

'கடவுள் இல்லை' வாசகம்: விளக்கம் கேட்கிறது கோர்ட்

Added : செப் 13, 2022 | கருத்துகள் (1) | |
புதுடில்லி : தமிழகத்தில், ஈ.வெ.ரா., சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள, 'கடவுள் இல்லை' என்ற வாசகத்தை நீக்க கோரிய மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் எம். தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுதும் உள்ள ஈ.வெ.ரா சிலைகளுக்கு கீழ், 'கடவுள் இல்லை'
தமிழக அரசு, ஈவெரா, உச்ச நீதிமன்றம் , TNGovt, EVR, Supreme Court,

புதுடில்லி : தமிழகத்தில், ஈ.வெ.ரா., சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள, 'கடவுள் இல்லை' என்ற வாசகத்தை நீக்க கோரிய மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் எம். தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுதும் உள்ள ஈ.வெ.ரா சிலைகளுக்கு கீழ், 'கடவுள் இல்லை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார்.



இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது தமிழக அரசு மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X